பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ? நீங்க போட்ட ஓட்டேல்லாம் போச்சே.

0
4228
Aajeedh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார். அதேபோல கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எழிமினேஷன் நடைபெற்றது. இதில் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டு இருந்த பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் முதல் வாரத்தில் வயதானவர்களும் அல்லது பெண்கள்தான் வெளியேறுவார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது அது இந்த சீசனுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ?

-விளம்பரம்-

கடந்த வாரம் பல்வேறு இணைய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சனம் ஷெட்டி மற்றும் ரேகாவிற்கு தான் மிகவும் குறைவான ஓட்டுகள் பதிவாகி இருந்தன ஆனால் ரேகாவை விட சனம் ஷெட்டி கொஞ்சம் வாக்குகளை பெற்று இருந்ததால் கடந்த வாரம் தப்பித்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள் கிழமை இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் சுரேஷ், சக்ரவர்த்தி, பாலாஜி, ஆஜீத், அனிதா, ஆரி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் யாரும் நாமினேட் ஆகவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பொதுவாக சனிக்கிழமை வெளியாகும் ப்ரோமோவில் கமல் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட ஏதாவது ஒரு போட்டியாளரின் பெயரையாவது அறிவித்து விடுவார். ஆனால் இன்று வெளியான மூன்று ப்ரோமோவிலும் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணமே இந்த முறை யாரும் எலிமினேஷன் மூலம் வெளியாகவில்லை. இந்த வாரம் ஆஜீத் தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவதாக இருந்தார்.

பல்வேறு தனியார் வலைத்தளங்களில் இந்த வாரம் முழுதும் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் அஜீத்திற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வந்தது. அவரை விட அனிதா சம்பத்திற்கு கொஞ்சம் அதிக வாக்குகள் கிடைத்து வந்தது. மேலும், பிக் பாஸ் ஓட்டில் கூட ஆஜீத்திற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்ததாம். ஆனால் அவரிடம் இருந்த ஏவிக்ஷன் ப்ரீ பாஸை பயன்படுத்தி அவர் இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement