அது பொறந்த கொழந்தை மாதிரி – பாலக்காட்டில் ஒருமாதம் யானையுடன் பழகியது குறித்து ஆரவ்.

0
1405
- Advertisement -

கேரள மாநிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த கோர சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் பெண் யானை ஒன்று பசியை போக்கிக் கொள்ள மலப்புரம் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கிருந்த இரக்கமற்ற மனிதர் ஒருவர் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை கொடுத்து உள்ளார். அதை சாப்பிட்ட யானையின் வாய் புண்ணாகியது. அதன் பிறகு உண்ண முடியாமல் பசியால் துடிதுடித்துள்ளது. ஆற்று நீரில் இறங்கிய அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பின் அந்த யானையை பிரேத பரிசோதனை செய்தார்கள். அப்போது அந்த யானையின் வயிற்றில் ஒரு குட்டி இருந்தது தெரிய வந்தது.

-விளம்பரம்-
Image

அந்த யானை இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை பெற்று எடுக்கும் நிலையில் இருந்தது. கர்ப்பமாக இருந்த யானையை கொடூரமாக கொல்லப்படுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின் அப்பகுதியிலேயே அந்த யானைக்கு அதிகாரிகள் இறுதி மரியாதை செய்து எரியூட்டியுள்ளனர். இதை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த கோர சம்பவம் குறித்து நடிகர் ஆரவ் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த மாதிரி ஈவு இரக்கமற்ற செயலை செய்த மனிதரை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். இது யார் செய்த வேலை என்று தெரியவில்லை. விலங்குகளிலேயே முதன்மை கடவுளாக திகழ்வது யானை தான். நான் நடிக்கும் படத்திற்காக பாலக்காட்டில் யானையுடன் பழகி அதனுடன் தங்கியிருந்தேன். அப்போது ஒரு மாதம் யானையுடன் பழகி இருந்தேன். ஆரம்பத்தில் பயமாக தான் இருந்தது. ஆனால், பின்னர் அது என்னிடம் குழந்தை போல பழகியது. தினமும் அதனுடன் வெளியிடுவேன். நான் பிரிய நினைக்கும் போது அது என்னை விடவே விடாது. அது ஒரு பிறந்த குழந்தை மாதிரி. அதனை விட்டு பிரிந்து வர மனமே இல்லை. ஆனால், இன்று இந்த தகவலை அறிந்த உடன் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

விலங்குகள் எல்லாம் மனிதர்களை விட சிறந்தவை. உலகிலேயே மிகக் கொடூரமான விலங்கு என்றால் அது மனிதர்கள் தான். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம் என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். மேலும், நரேஷ் சம்பத் இயக்கத்தில் தற்போது ராஜபீமா என்ற படத்தில் ஆரவ் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆஷிமா நர்வால், ஓவியா, யாஷிகா போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க யானைகள் சம்பந்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement