நேத்து என்னெல்லாம் செஞ்சிச்சி – நிஷாவை வச்சி செய்யும் அர்ச்சனா.

0
851
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இன்னும் 12 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த வாரமே நடைபெற்று முடித்துவிட்டு கடந்த வாரம் கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது அந்த டாஸ்கில் தோல்வி பெற்ற போட்டியாளர்கள் அடிப்படையில் பாலாஜி அனிதா, ஆரி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் டாப் 3 இடத்தை பிடித்த ஆரி பாலாஜி அர்ச்சனா ஆகிய மூவருமே இந்த வார நாமினேஷனில் இடம் பெற்று இருந்தார்கள். இந்த மூவருக்கும் பதிலாக பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார் ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா, சோம் சேகரையும் நாமினேட் செய்தார். இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

இதில் நேற்றய நிகழ்ச்சியில் அர்ச்சனாவிடம் இருந்து சோகத்தை வர வைப்பதர்க்காக, மனிதர்கள் அணியில் இருந்த நிஷா, அர்ச்சனாவின் தந்தை இறப்பு குறித்து பேசியதால், இந்த டாஸ்க் முடிந்த பின்னர் கண்ணீர் விட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார் அர்ச்சனா. இப்படி ஒரு நிலையில் இன்று நிஷா ரோபோவாக மாறி இருக்க அவரை வச்சி செய்து இருக்கிறார் அர்ச்சனா.

-விளம்பரம்-
Advertisement