பிக் பாஸுக்கு பின் நடந்த வெற்றிக் கொண்டாட்டம்,புறக்கணிக்கப்பட்ட அர்ச்சனா – பைனலில் நடந்த அந்த பிரச்சனை தான் காரணமா ?

0
112
- Advertisement -

சமீபத்தில் தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இதுவரை வந்த சீசன்களிலேயே வைல்ட் கார்ட் மூலம் நுழைந்து ஒரு நபர் வெற்றி பெற்றது இல்லை. இதுதான் முதல் முறை என்றும், அர்ச்சனா தான் அந்த சாதனையை செய்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், அர்ச்சனா வெற்றி பெற்றதை பலர் கொண்டாடினாலும் சில பிக் பாஸ் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிகழ்ச்சியில் அவர் என்ன கன்டென்ட் தந்தார்? அவர் தன்னை பிரமோட் செய்ய ஆட்களை தயார் செய்து வைத்துவிட்டு போயிருக்கிறார். இதனால் இவருக்கு எப்படி டைட்டில் பட்டதை கொடுக்கலாம்? என்றெல்லாம் பயங்கரமாக விமர்சித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் பினாலேவில் நடந்தது:

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் பினாலே அன்று ரிசல்ட் அறிவித்த சில நிமிடங்களில் பிக் பாஸ் செட்டிலயே பார்வையாளர்கள் அர்ச்சனாவுக்கு டைட்டில் கொடுத்ததை கண்டித்து கோஷமெல்லாம் போட்டிருந்தார்கள். நிறைய பேர் மாயாவுக்கு ஆதரவாக தான் குரல் கொடுத்திருந்தார்கள். பின் நிகழ்ச்சி முடிவடைந்த உடன் போட்டியாளர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கும் வகையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பாட்டில் டைட்டில் வென்ற அர்ச்சனாவை தவிர எல்லோருமே கலந்து கொண்டிருந்தார்களாம்.

பார்ட்டியில் நடந்தது:

டைட்டில் வின்னர் இல்லாமல் ஒரு பார்ட்டியா? என்றெல்லாம் பலருமே கேட்டு இருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நிகழ்ச்சி தொடர்புடைய சிலர் கூறியிருப்பது, ஆமாம், டைட்டில் வின்னர் அர்ச்சனா இல்லாமல் தான் பார்ட்டி நடந்தது. பிக் பாஸ் வரலாற்றிலேயே டைட்டில் வின்னர் இல்லாமல் நடந்த முதல் சக்சஸ் பார்ட்டி இதுதான். அர்ச்சனா கலந்து கொள்ளாததற்கு பலரும் பலவிதமான காரணங்கள் சொல்கிறார்கள். முக்கிய அர்ச்சனா பார்ட்டியை தவறவிடவில்லை, புறக்கணிக்கப்பட்டார் என்று தான் சொல்லணும். வெற்றி பெற்ற பிறகு எழுந்த பி ஆர் வேலைகள் புகார் பலரையும் கடுப்பாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அர்ச்சனா குறித்து சொன்னது:

சொல்லப்போனால் சேனலுமே அர்ச்சனா மீது கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறதாக சொல்றாங்க. ஒவ்வொரு சீசன் போதும் டைட்டில் குறித்த சர்ச்சைகள் வருவது வழக்கம்தான். கடந்த சீசனில் கூட நடிகர் அசிமுக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது குறித்து பல பிரச்சனைகள் இருந்திருந்தது. ஆனால், இந்த சீசனில் பிக் பாஸ் செட்டிலேயே பார்வையாளர்களாக வந்தவர்கள் சிலர் நியாயமற்ற தேர்வு என்றெல்லாம் குரல் எழுப்பி சேனல் மீது எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அவர்கள் அப்படி குரல் எழுப்ப அர்ச்சனாவும் ஒரு வகையில் காரணமாக இருந்தார் என்று நம்பியதால் தான் சேனல் அவர் மீது வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

விமர்சகர் வீடியோ:

இப்படி இருக்கும் நிலையில் விமர்சகர் ஒருவர், பிக் பாஸ் பினாலேவில் டாப் 5 போட்டியாளர்கள் அவர்களுடைய உறவினர்களை தவிர பொதுமக்கள் யாருமே இல்லை. சேனல் தரப்பில் அனுமதி தரவில்லை. மாயாவிற்கு மூன்றாம் இடம் கிடைத்தவுடன் பயங்கரமாக கூச்சலிட்டும் கரகோஷம் செய்தும் கத்தி கொண்டு இருந்தார்கள். மூன்றாவது இடத்தை பிடித்தவருக்கு இந்த ஆட்டமா? என்று தெரியவில்லை. பயங்கரமாக மாயா பி ஆர் வேலை பார்த்து இருக்கிறார். சேனல் தரப்பிலும் மாயாவிற்கு தான் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement