பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மனம் திறந்து ரக்ஷிதா குறித்து தினேஷ் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே ரக்ஷிதா- தினேஷ் உடைய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் ரக்ஷிதா- தினேஷ். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.
இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரியவில்லை. பின் ரக்ஷிதா கடந்த பிக் பாஸ் 6 சீசனில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை . இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.
தினேஷ்-ரக்ஷிதா சர்ச்சை:
பின் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. அதற்கு பின் இருவரும் தங்கள் வேலையை பார்க்க தொடங்கினார்கள். சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொண்டிருந்தார். இதில் அவருடைய மனைவிக்காக தான் கலந்து கொண்டிருப்பதாகவும், டைட்டிலை அவருக்காக பரிசளிப்பேன் என்றெல்லாம் தினேஷ் கூறியிருந்தார். இதைப் பார்த்த தினேஷ்- ரக்ஷிதா ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூறி இருந்தார்கள்.
தினேஷ் பிடித்த இடம்:
இதற்கு ரக்ஷிதா, வாய்ப்பில்லை என்பது போல பதிவு போட்டிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தினேஷ் டாப் 5ல் வந்தார். பின் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
தினேஷ் பேட்டி:
இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தினேஷ் அவர்கள் முதல்முறையாக அளித்த பேட்டியில் ரக்ஷிதா குறித்து கூறியிருந்தது, நான் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்று தான் நினைத்திருந்தேன். டைட்டிலை பெற்று என்னுடைய வாழ்க்கையை மீண்டும் தொடரலாம் என்று நான் ஆசையோடு உள்ளே போனேன். ஆனால், வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அந்த மாதிரி தான் இருக்கிறது.
ரக்ஷிதா குறித்து சொன்னது:
இதற்கும் மேலும் ரசிதா மனம் மாறுவார் என்று சொல்ல முடியவில்லை. ரக்ஷிதா ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளே இருந்து கொண்டிருக்கிறார். அது என்னால் உடைக்க முடியாத வகையில் வலுவாக இருக்கிறது. இதற்கும் மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று கூறினார். இதை பார்த்த தினேஷின் ரசிகர்கள், நீங்கள் எடுத்திருக்க முடிவு தான் சரியானது. இதையே பாலோ பண்ணுங்க. தயவுசெய்து உங்களை வேண்டாம் என்று சொன்னவர்களோடு மீண்டும் மீண்டும் சேர வேண்டும் என நினைக்காதீங்க என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.