சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
பொதுவாக சினிமா பற்றி மட்டுமே தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் மாறன் சமீபத்தில் அசல் கோளாறு குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அசல் கோளாறு மற்றும் நிவாஷினி இருவரும் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு ”பிக் பாஸ் வேற லெவலில் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டது. அசல் கோளாறு பற்றி உங்கள் கருத்து என்ன என்று பதிவிட்டுள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல விமர்சகரான பிரசாந்த் அசல் கோளாறு நிவாஷினி வீடியோவை பதிவிட்டு ‘என்ன கொடும சார் இது’ என்று பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகச்சியின் 6வது சீசன் மூன்று வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கொலார். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார்.
அதன் பின் இவர் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்திலும் அசல் பாடலை எழுதி இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பு இழுத்து இருந்தார்.
ஆனால், குயின்சி, நிவாஷினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருக்கிறது. குயின்சி உடைய கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள்.பின் குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு அசல் கடலை போட்டு இருந்தார்.
அதே போல மைனாவின் கையை பிடித்து தடவியது, மகேஸ்வரியின் காலை தடவுவது போன்ற வேலையை தொடர்ந்து செய்து இருக்கிறார் அசல். இந்நிலையில் அசல்-நிவாஷினி காதல் கதை பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்து இருக்கிறது. பொதுவாகவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கதை உருவாவது வழக்கமான ஒன்றுதான். ஓவியா-ஆரவ், மஹத்-யாஷ்மிகா, கவின்-லாஸ்லியா போன்று ஒவ்வொரு சீசனிலும் காதல் கதை உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் இந்த சீசனிலும் அசல் – நிவாஷினி காதல் உருவாகி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட அசல் நிவாஷினி மடியில் அமர்ந்து அவருடன் கொஞ்சி பேசி இருந்தார். இவர்கள் இருவருமே நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஆனால், இதை இருவருமே காதல் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் செய்வது எல்லாம் பார்த்தால் காதலிப்பது போல தான் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வார நாமினேஷனில் அசல் பெயர் வந்திருக்கிறது. மேலும், குறைந்த வாக்குகளின் பட்டியலில் அசல் இருக்கிறார். இந்த சீசனில் அசல் – நிவாசினி காதல் உருவாகி இருப்பதால் அசல் வெளியேறுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.