முன்னாள் பிக் பாஸ் வெற்றியாளர்களை கொச்சைபடுத்தியுள்ள பாலாஜி – வைரல் வீடியோ.

0
52829
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை எட்டியுள்ளது. என்னதான் 4 சீசனை எட்டினாலும், ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான சீசன் என்றால் அது முதல் மற்றும் மூன்றாம் சீசன் தான். தற்போது நடைபெற்று வரும் சீஸனின் போட்டியாளர்கள் கடந்த சீஸனின் இருந்த ஸ்வாரஸ்யத்தையும் கண்ணியத்தையும் கடிபிடிக்க தவறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தற்போது இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பாலாஜி, முன்னாள் பிக் பாஸ் வெற்றியாளர்களின் வெற்றியை விமர்சித்து உள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி ஒரு சர்ச்சையான போட்டியாளராக தான் இருந்து வருகிறார். சனம் ஷெட்டியை தறுதலை என்று திட்டியது, ஆரியிடம் காலை தூக்கி காண்பித்து பேசியது என்று பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் பாலாஜி. அதே போல ஆரம்பத்தில் இருந்தே இவர் தனக்கான நபர்களை வைத்துக்கொண்டு ரியோ கேங்கை போல தனக்கான ஒரு கேங்கை வைத்துகொண்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே சம்யுக்தா மற்றும் சுசித்ரா வெளியேறி விட்டனர். இதனால் தனக்கு ஆதரவாக அனிதா மற்றும் சனம் ஷெட்டியை திருப்பிக்கொண்டு வருகிறார் பாலாஜி.

- Advertisement -

இதனால் கடந்த சில நாட்களாகவே அனிதாவிடம் தான் அதிகம் பேசிக்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் இவர் டாஸ்க் முடிந்த பின்னர் அனிதாவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ‘இங்கே அமைதியா இருக்கவன் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை மாற வேண்டும், ஒக்காந்து வேர் கடலை சாப்பிட்டு வெற்றி பெற்று போனால் எப்படி’ என்று கூறினார்.

அதற்கு அனிதா, இதுவரைக்கும் வெற்றி பெற்று போனவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தவர்கள் தான்’ என்று சொன்னதும் பாலாஜி ‘மாறும்’ என்று கூறுகிறார். அதற்கு அனிதா, ஆனால் வின் பண்ண வச்சது எல்லா ஆடியன்ஸ் தானா, ஆடியன்ஸ நாம நம்பித்தான ஆக வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தப்பலரும் பாலாஜி, கடந்த சீசன் வின்னர் முகேனை தான் சொல்கிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் ஆரவ் டைட்டில் வின்னராக வந்த போது அந்த சீஸனின் இரண்டாவதாக வந்த சினேகன் தான் முதல் பரிசுக்கு தகுதியானவர் என்ற சர்ச்சை எழும்பியது. அதே போல இரண்டாம் சீஸனின் ரித்விகா வெற்றி பெற்ற போது, பலரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், கடந்த சீஸனின் கவின் அல்லது தர்ஷன் தான் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேன் வெற்றி பெற்றார். அதையும் பலரும் விமர்சித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement