தென்னிந்திய சினிமா திரை உலகில் நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வந்தவர் சேரன். இதுவரை பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட வயது அதிகம் உள்ள போட்டியாளர்களில் 90 நாட்கள் வரை பயணம் செய்தவர் சேரன் தான். பொதுவாகவே பிக்பாஸ் வீட்டில் வயதில் அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் 50 நாட்களுக்குள்ளேயே எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால், சேரனின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் 90 நாட்கள் வரை பயணம் செய்ய காரணமாக இருந்தது என்று கூட கூறலாம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சேரன் ஒரு நல்ல மனிதர் என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் எடுத்தார்.மேலும், சேரன் ஒரு அப்பாவாக, நண்பராக, அண்ணனாகவும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விளங்கினார்.
அது மட்டும் இல்லைங்க லாஸ்லியா விஷயத்தில் மூலம் தான் சேரனுக்க மக்களிடையே மதிப்பும் மரியாதையும் கூடியது என்று கூட சொல்லலாம்.ஆனால்,சமூக வலைத்தளங்களில் சேரன் உறவு முறை குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நான் லாஸ்லியா விடம் ஒரு தந்தையை போல தான் நடந்து கொண்டேன். போலியாகவோ, பொய்யாகவோ நடிக்கவில்லை. அப்படி நான் நடித்திருந்தால் இந்த உலகத்தில் வாழ அருகதை அற்றவன் என்ற அர்த்தம் என தன்னை விமர்சித்தவர்களுக்கு ஆவேசத்துடன் பதிலடி கொடுத்தார் இயக்குனர் சேரன்.தற்போது சமூக வலைத்தளங்களில் சேரன்,லாஸ்லியா நியூஸ் தான் ட்ரெண்டிங்காக போய்க்கொண்டு இருக்கிறது.
இதையும் பாருங்க : தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை திருமணம் செய்த பாலு மஹிந்திராவின் சொல்ல மறந்த கதை..
சேரன் அவர்கள் தந்தையைப் போல் பழகி வந்ததை குறித்து பலர் விமர்சனம் செய்து உள்ளார்கள் நெட்டிசன்கள். இந்த நிலையில் லாஸ்லியாவை கட்டியணைத்து பாசம் பொழிவது எல்லாம் போலியான விஷயம் என்றும் கூறியிருந்தார்கள்.இது குறித்து கடுமையாக விமர்சனங்களை தெரிவித்து வந்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த கடுமையான விமர்சனங்கள் செய்தவர்களுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியிருந்தார். அது மட்டும் இல்லைங்க தற்போது திரையரங்குக்கு வெளிவர உள்ள ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையை பயன்படுத்திக் கொண்டார். இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சேரன் அவர்கள் கூறியது, வாழ்க்கையில் அப்பா என்ற உணர்வு ரொம்ப உன்னதமானது, புனிதமானது இதுகுறித்து ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு கொடுக்கும் முத்தம் காமத்திற்கு உரியது அன்று என பல பலபேர் கூறியுள்ளார்கள்.
மேலும், நான் அப்பா என்பதை அடிக்கடி கடவுள் எனக்கு ஞாபகம் படித்திக்கொண்டே இருப்பார். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நான் அப்பாவாக வாழ்ந்து வந்தேன். மேலும் ,அந்த நிகழ்ச்சியில் உண்மையாகவும், நேர்மையாகவும் தான் இருந்தேன். நான் எப்பொழுதும் ஒருபோதும் போலியாக நடிக்கவில்லை. அப்பா மகள் பாசத்தை பொய்யாக காண்பித்தேன் என்று கூறினால் இந்த உலகில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.தந்தை மகள் மீது காட்டும் பாசத்திற்கு அளவு ஏதும் இல்லை. அந்த பாசத்தை காலங்கள் தான் சொல்லும். எது உண்மையான பாசம்? எவ்வளவு ஆழமான பாசம்? என்பது என்று. இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரனின் “ராஜாவுக்கு செக்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் கிடைத்த ஆதரவை வைத்து இப்போ இந்த படத்தின் ட்ரைலரை மீண்டும் வெளியிட்டு உள்ளார்கள் படக்குழு.
இந்த ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். இந்தப் படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்,படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.அதோடு ஜெயம் ரவியின் ‘மழை’ படத்தை இயக்கிய சாய்ராஜ்குமார் அவர்கள் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து கனாக்காணும் சீரியலின் மூலம் பிரபலமானவரும், சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவருமான நடிகர் இர்பான் தான் இந்த படத்திற்கு வில்லனாக நடித்து உள்ளார். இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளது தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளர் வினோத்ய ஜமானியா.
இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமாகிறார்.இதனைத் தொடர்ந்து படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் எம்.எஸ் பிரபு. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை டேஞ்சர் மணி என்பவர் தான் கையாண்டுள்ளார். இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என பல கலவைகளை கொண்ட படமாக இருக்கும் என படக்குழுவினர் கூறினார்.கூடிய விரைவில் திரையரங்குகளில் ராஜாவுக்கு செக் படத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்கள்.