தமிழ் பொண்ணு, குடும்ப குத்து விளக்கு.. ரித்விகாவா இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்திருக்காரு..

0
24589
Rithvika
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்டனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில நடிகர் நடிகைகளை பங்கு பெறச் செய்வது வழக்கம். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன் களை நீங்கள் உற்றுநோக்கினால், சினிமாவில் யார் ஜெயித்தால் அவர்களின் சினிமா வைப்பின் பாதைக்கு உதவியாக இருக்குமோ அவர்கள் தான் வெற்றிபெறுவார்கள். அந்த வகையில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்திவிகா மூன்றாவது சீஸனில் முகென் என்று பலருக்கு சினிமா துறையில் நுழைவதர்க்கான பாதையை வகுத்து கொடுத்துள்ளது பிக் பாஸ். ஆனால், பிக்பாஸ் பட்டத்தை வென்று யாருக்கும் இதுவரை பெயர் சொல்லும்படியான எதிர்காலம் அமைய வில்லை என்பது தான் உண்மை. முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் நடித்த எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. இதே கதைதான் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்ற ரித்திவிகாவிற்கும்.

-விளம்பரம்-

- Advertisement -


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை ரித்திகா. பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதுகளும் கிடைத்திருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பெயர் சொல்லும்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் பாருங்க : லாஸ்லியா விஷயத்தில் அப்படி நடந்திருந்தால், நான் வாழவே அருகதையற்றவன்.. சேரன் உருக்கமான பேச்சு..

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் அடிக்கடி கூறிக் கொண்டே வந்தார் ரித்திவிகா. சொல்லப்போனால் ரித்திகா தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசியதால் தமிழ் அல்லாத போட்டியாளர்களான யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மும்தாஜ் போன்றவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் தமிழ் பெண்கள் தான் ஜெயிக்க வேண்டும் என்று இவரும் ஜனனியும் பேசிக்கொண்ட விஷயம் அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை ரித்திவிகா மிகவும் அடக்கமான பெண்ணாக இருந்து வந்தார். இறுதிவரை அமைதியான பெண் என்று பெயரெடுத்த ரித்திவிகா இறுதியில் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார்.இதனால் , பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி ஹீரோயினாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் டார்ச்லைட், சிகை, நேத்ரா போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், இந்த மூன்று படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் ரித்திகா. அப்போது தான் நடித்துள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி உண்டு என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பிக்பாஸ் வீட்டில் வெளியிட்டு இருந்தார். ஆனால், இந்த படத்திலும் ரித்விகா துணைக் கதாபாத்திரம் தான் நடித்துள்ளார். எப்படியாவது முன்னணி நடிகையாக வந்து ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற கனவில் இருந்து வருகிறார் ரித்திகா. இதனால் தனது குடும்ப பாங்கான தோற்றத்தை எல்லாம் கழட்டி போட்டு விட்டு தற்போது படும் ஆக மாறி வருகிறார் அம்மணி. இதற்காக அடிக்கடி பல மாட்டர்னான போட்டோஷூட்களை நடத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் படுமோசமான உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை கண்ட ரசிங்கர்கள் பெரும் ஷாக்கடைந்துள்ளனர்.

Advertisement