கமலின் அந்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி.! சேரன் அறிவித்த அதிரடி.!

0
915
Cheran

1992ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளிவந்தது தேவர் மகன் படம் .இந்த படத்தில் நடித்தும்,தயாரித்தும் உள்ளது உலகநாயகனே. இந்த படத்தில் சிவாஜிகணேசன், கவுதமி, கா.கா.ராதாகிருஸ்ணன், ரேவதி,நாசர்,வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.மேலும், இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்து உள்ளார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத்தந்தது.அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தது.மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் தேவர் மகன் படத்தை விரசாத் என்று ரீமேக் செய்தார்கள்.இந்த தேவர் மகன்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகில் இயக்குனராக பணியாற்றி வருபவர் சேரன். இவர் தமிழ் திரைப்படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது விஜய் டிவி தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக சேரன் அவர்கள் பங்கு பெற்றார் .மேலும் சில வாரங்களுக்கு முன்னால் அதாவது பிக்பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் சேரன் வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் பாருங்க : யாருக்கு ஓட்டு போட வேண்டும்.! பிக் பாஸிற்கு பின் தர்ஷன் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.!

இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.மேலும், அடுத்த பணிக்கு தயாராக உள்ளேன் என்று சில தினங்களுக்கு முன்னால் அவர் பதிவிட்டு வந்தார். இதனைத்தொடர்ந்துசென்னை வடபழனியில் உள்ள கமலா சினிமாஸ் திரையரங்கில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் நம்ம வீட்டுப்பிள்ளை படம் பார்த்தார்.பின் சேரனிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகள் எழுப்பினர்.அந்த எல்லா கேள்விகளுக்கும் சேரன் பதிலளித்தார்.

-விளம்பரம்-

அப்போது கமலை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி கொண்டிருக்கிறது என்று கேட்டார்கள். இதுகுறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு இயக்குனர் சேரன் அவர்கள் கூறியது ,அந்த மாதிரியான எந்த ஒரு பேச்சுவார்த்தையும் அவருடன் நான் பேசவில்லை. மேலும், கமல் சாரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே போகும் போதும், வெளியே வரும் போதும் தான் பார்த்தேன். அதுமட்டுமில்லாமல், மேடையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டும் அவருடன் இருந்திருப்பேன். அந்த சமயத்தில் அவரிடம் இதுபற்றி எல்லாம் பேசவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு ஒருமுறை அவரிடம் தேவர் மகன் 2 படம் பண்ணலாமா சார்! கதை தயாராக இருக்கிறது என சொல்லி இருந்தேன். ஆனால், அவர் எந்த ஒரு பதிலையும் இன்னும் கூறவில்லை. மேலும், கமலஹாசன் அவர்கள் அனுமதித்தால் தேவர்மகன் 2 படத்திற்கான கதையை சொல்லுவேன். மேலும், அவர் ஓகே என்று சொன்னால் படம் இயக்கவும் தயாராக உள்ளேன் என்று பதிலளித்துள்ளார் சேரன். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தின் பணிகளை செய்து கொண்டுள்ளார் இயக்குனர் சேரன். விஜய் சேதுபதியின் புதிய படத்தின் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என கூறியிருந்தார். இதனால் இது விரைவில் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement