பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமக 79 நாட்களை நிறைவு செய்துள்ளது. கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் கேள்வி கேட்டு சேரன் ரகசிய அறையில் இருந்து கவினுக்கு கடிதம் அனுப்பியது, பிரீஸ் டாஸ்க்கின் போது முகெனின் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, கொஞ்சம் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் என்று நேற்று இணையத்தில் நிறைவடைந்தது.
மேலும், இந்த வாரம் முழுக்க இந்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற இருக்கிறது, இன்றைய நிகழ்ச்சியில் தர்ஷனின் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் சேரன் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியுள்ளார்.
இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த மாபெரும் நடிகர் யாருனு தெரியுதா ? முடிஞ்சா கண்டுபிடிங்க.!
இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், வனிதா, ஷெரின், தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் கண்டிப்பாக வனிதா வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ,மேலும், பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கிலும் நமது Behind Talkies-ல் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கிலும் வனிதாவிற்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.