பிக் பாஸிற்கு பின் முதன் முறையாக மதுவை சந்தித்த சேரன்.. நன்றி தெரிவித்த மதுவின் கணவர்..

0
31277
Cheran-Madhu
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சைகள் நடந்தேறியது. அதில் மிகவும் சர்ச்சையான விஷயமாக பார்க்கப்பட்டது மதுமிதாவின் திடீர் வெளியேற்றம் தான். மேலும்ம் ஒரு எபிசோடில் மதுமிதா காவேரி குறித்து பேசியதால் அவரை ஷெரின் வார்த்தைகளால் புண்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேறிய போது சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அப்போது வீட்டில் இருந்த 8 பேர் மீதும் மதுமிதா வழக்கு தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இறுதிப் போட்டிக்கு மதுமிதாவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை இருப்பினும் மதுமிதா கணவர் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு வந்தது போல விஜய் தொலைகாட்சி போலியான ஒரு வீடியோவை இணைத்து ஒளிபரப்பியது. இதனால் விஜய் டிவியை கேள்வி கேட்டு மதுமிதாவின் கணவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுமிதா விஷயத்தில் ரசிகர்கள் பலரும் விஜய் டீவிக்கு எதிராகத்தான் இருந்து வருகிறார்கள். இத்தனை விஷயங்கள் நடந்தும் மதுமிதா குறித்து யாருமே இன்னமும் வாய் திறக்காதது ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவ்வளவு ஏன் மதுமிதாவுக்கு ஆதரவாக இருந்த சேரன் கூட மதுமிதா குறித்து எந்த ஒரு பதிவையும் போடவில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேரன், ஷெரின் மற்றும் சாக்க்ஷியை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்தையும் அளித்தார். மேலும், அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார் சேரன்.

- Advertisement -

சேரனின் இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர் மிக்க மகிழ்ச்சி, மதுவுடன் தாங்கள் இந்த தருணங்களை பகிர்ந்திருந்தால் இன்னும் வெகு சிறப்பாக இருந்திருக்கும்! மதுவிற்கு தான் தேவைப்படுகிறது வலியை உடைக்கும் தாழ்-அன்பு அரவணைப்பு! விரைவில் எதிர்நோக்குகிறோம்! என்று பதிவிட்டிருந்தார். அதே போல பலரும் மதுமிதாவை சந்தித்த அவரது நிலை குறித்து பதிவிடுங்கள், அவருக்கு ஏற்பட்ட அநீதி விரைவில் வெளிவர வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்றும் கமன்ட் செய்து வந்தனர்.

ரசிகர்களின் கமன்ட்களுக்கு செவி சாய்த்த சேரன், வணக்கம், நான் மதுமிதாவிடம் பேசி கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று பதில் அளித்திருந்தார். இதனால் விரைவில் மதுமிதாவை, சேரன் சந்திப்பார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில் சொன்னதை போலவே சேரன் மதுமிதாவை சந்தித்துள்ளார். அதனை உறுதி செய்யும் விதமாக மதுமிதாவின் கணவர் மோசஸ், நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஆனால்,இன்னமும் மதுமீதாவை சேரன் சந்தித்த எந்த ஒரு புகைப்படத்தையும் சேரனோ மதுமிதாவின் கணவரோ சமூக வலைதளத்தில் வெளியிடவில்லை. இருப்பினும் மதுமிதா விடம் மற்ற போட்டியாளர்கள் இன்னும் பேசாத நிலையில் சேரன் மட்டும் மதுமிதாவை நலன் விசாரித்துள்ளது சேரன் மீது மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் மதுமிதாவிற்கு ஏற்பட்ட அநீதி வெளியாகி அவருக்கும் நீதி கிடைக்கும் என்றும் மதுமிதாவின் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement