பிக் பாஸில் இந்த முறையும் ஒரு சூப்பர் மாடல் பிளஸ் சமுத்திரகனி பட நடிகை. அட இவங்களா அப்போ Army நிச்சயம்.

0
188
biggboss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த ஒரு புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டாப் லிஸ்டில் இருப்பது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்று உலகம் முழவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் பரிசை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இதனை அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள்? என்ற ஆர்வம் ஆரம்பித்து விட்டது.

- Advertisement -

நிகழ்ச்சி குறித்த தகவல்:

தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் பேசி அவர்களுடைய சம்பளம் மற்றும் பிற விஷயங்களை பிக் பாஸ் குழு இறுதி செய்து வருகின்றனர். அதேபோல் போட்டியாளர்கள் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட், ரக்ஷிதா, விசித்ரா, விஜே அர்ச்சனா, ஜிபி முத்து, சிவகுமார், நடிகை ஜாக்குலின், தீபா சங்கர், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், நடிகர் மகேஷ், சமீபத்தில் நடிகை மகாலக்ஷ்மியை திருமணம் செய்த ரவீந்தர், அமுதவாணன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா என்று பல பேர் வெளியாகி இருக்கிறது. இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறையும் ஒரு சூப்பர் மாடல் :

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் அடுத்த போட்டியாளர் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடல்கள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட சூப்பர் மாடல் மீரா மிதுன் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு போட்டியிடராக பேசப்பட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனிலும் ஒரு சூப்பர் மாடல் கலந்து கொள்ள இருக்கிறார்.

யார் இந்த ஷெரினா :

அவர் வேறு யாரும் கிடையாது சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த ‘வினோதய சித்தம்’ என்ற படத்தில் நடித்த ஷெரினா என்பவர் தான் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாடல் அழகியான இவர் வினோதய சித்தம் படத்தில் தீபக்குக்கு மனைவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement