அவங்க வெளியே போகணும்னு நானும் ஆசைப்பட்டேன் – சம்யுக்தாவின் நல்ல எண்ணத்தை பாருங்க.

0
5616
samyuktha

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத பல்வேறு புதுமுகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்கள் அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.மாடல் அழகியான இவர் சூப்பர் மாம் என்ற பட்டத்தையும் பெற்று இருக்கிறார் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களில் மிகவும் அமைதியானவர் போலத்தான் இருந்து வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர் பாலாஜியுடன் இணைந்து செய்த சில மோசமான செயல்களால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டு இருந்தார்.

samyuktha

சம்யுக்தா வெளியேறுவதற்கு முன்பாக ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா என்று 4 பேர் வெளியேறி இருந்தனர். ஆனால், சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று.இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை பிக்பாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இதனைமிகவும் தந்திரமாக வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார்.

- Advertisement -

ஒருவேளை இந்தப் பவரைபிக் பாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப் படாமல் இருந்திருந்தால் சம்யுக்தாவிற்கு பதிலாக அனிதாதான் வெளியேறி இருப்பார் என்பது பலரின் நம்பிக்கை. அதே போல சம்யுக்தா வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது, ஆரியை வளர்ப்பு சரியில்லை என்று சொன்னதும், சனம் ஷெட்டியை ‘கலீஜ்’ என்று சொன்னதும் தான் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி இவரின் வெளியேற்றத்திற்கு காரணமாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சம்யுக்தா, சுசித்ரா குறித்து பேசியுள்ளார்.

அதில், சுச்சிகிட்ட பழகக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. நல்லா அன்பா இருப்பாங்க. அதே நேரத்தில் ரொம்பவும் நேர்மையாக இருப்பாங்க. ஆனால், திடீர்னு கோச்சுக்குவாங்க. அவங்க எதுக்காகக் கோபப்படுறாங்கனு என்னால புரிஞ்சுக்கவே முடியாமதான் இருந்தது. அவங்ககிட்ட கேம் பிளான் எதுவுமே இருந்த மாதிரி தெரியலை. அதனால அவங்க ஷோவுல இருக்கிறதைக் காட்டிலும் எவிக்‌ட் ஆகிப் போயிடலாமேனு நினைச்சிருக்கேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement