செம்மரம்பாக்கம் அருகில் அமைந்துள்ள பிக் பாஸ் வீடு, புகுந்து மழை நீர். வெளியேறிய போட்டியாளர்கள். பிக் பாஸ் தொடருமா ?

0
2535
BB

தற்போது நிவர் புயலின் கன மழை காரணமாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து அதன் முழு கொள்ளளவான 24 அடியை நெருங்கியடுத்து, ஏரியிலிருந்து நேற்று மதியம் முதல்கட்டமாக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்க, அதிகரிக்க ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு 9,300 கன அடி வரை படிப்படியாக உயர்ந்தப்பட்டது. இன்று (நவம்பர் 26) அதிகாலை ஏரியின் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 4,371 கன அடியாக குறைந்தது.

BB

இதனையடுத்து ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் 9,300 கன அடியிலிருந்து 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மழையின் அளவு சென்னையில் குறைந்தாலும் ஆங்காங்கே தண்ணீர் நீங்கி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும் பிக்பாஸ் வீட்டை மழை நீர் சூழ்ந்திருக்கிறது. வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாம்.

- Advertisement -

அதே போல பிக் பாஸ் அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில்தான் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்து இருக்கிறது. வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததுவிட்டதாலும், செம்பரம்பாக்கம் ஏரி மிக அருகில் இருப்பதாலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தாங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறினார்களாம். இதனால் உடனடியாக முடிவெடுத்த சேனல் நிர்வாகம் அவர்களை நேற்று மாலை 4 மணி அளவில் நான்கு வாகனங்களில் அழைத்துச் சென்று பிரபல தனியார் ஹோட்டலில் தங்க வைத்து இருக்கிறதாம்.

தற்போதும் அவர்கள் ஹோட்டலில் தான் தங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே பிக் பாஸ் வீட்டில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் பிக்பாஸ் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எனவே நேற்று மாலை முதல் இன்று ஒளிபரப்பாக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் படப்பிடிப்புகள் நடக்கவில்லையாம். எனவே நேற்று வரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறதாம் பிக்பாஸ். அதனால்தான் நேற்று காண்பிக்கப்பட்ட சனம் மற்றும் ரியோவிற்கு இடையிலான பிரச்சினையை இன்று ப்ரோமோவில் போட்டு காட்டி இருந்தார்கள் என்பதும்

-விளம்பரம்-
Advertisement