மிமிக்ரி செய்து பலரை சிரிக்கவைத்த ராஜுவை நொட்டம் சொன்ன Trio கேங் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
7270
priyanka
- Advertisement -

ராஜு ஜெயமோகன் காமெடி செய்து கொண்டு இருக்கும் போது அவர் குறித்து பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஆகியோர் புரணி பேசி கேலி செய்து வீடியோவால் ரசிகர்கள் பலரும் Trio கேங்கை கழுவி ஊற்று வருகிறார்கள். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஆரம்பித்த கொஞ்சம் நாட்களிலேயே ஏதாவது உருவாகிவிடும் அந்த வகையில் சென்ற சீசனில் கூட அன்பு கேங் செய்த சேட்டைகள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இதனாலேயே அந்த பேங்கில் இருந்து யாருமே வெற்றி பெறவில்லை. அதிலும் குறிப்பாக அர்ச்சனாவை தான் பலரும் கேலி செய்தனர்.

-விளம்பரம்-

பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பாக அர்ச்சனாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால், அவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பின்னர் அவரது பெயர் டேமேஜ் ஆனது. அந்த வகையில் தற்போது அர்ச்சனாவின் வழியில் நடந்து வருகிறார் பிரியங்கா. அர்ச்சனாவை போல பிரியங்காவிற்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பாக லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், இவர் பிக்பாஸில் வந்த ஒரு சில நாட்களிலேயே தனக்கென்று ஒரு டீமை ஆரம்பித்து பாலிடிக்ஸ் செய்து வருகிறார்.

- Advertisement -

இன்று வெளியான ரோபோவில் கூட இந்த Trio கேக்கை சேர்ந்த பிரியங்கா மற்றும் அபிஷேக்கை கமல் வச்சி செய்து இருந்தார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ராஜு மிமிக்ரி செய்து மற்றவர்களை மகிழ்வித்து கொண்டிருக்கும்போது அவரைப் பற்றி ஏளனமாக பேசிய பிரியங்கா அபிஷேக் மற்றும் நிரூப்பை நெட்டிசன்கள் கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் ஒரு மிகப்பெரிய என்டர்டெய்னராக திகழ்ந்து வருகிறார் ராஜு. சொல்லப்போனால் இந்த சீசனில் ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர்களாக திகழ்ந்து வருகிறார். இவருக்கென்று தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே ராஜீவை தங்கள் அணியில் எப்படியாவது இணைத்துக் கொள்ளலாம் என்று பிரியங்காவின் கேங் திட்டம் தீட்டியது.

-விளம்பரம்-

ஆனால், அதற்காக அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் வேஸ்ட் ஆகிவிட்டது. இதனால் பிரியங்காவின் கேங்க் ராஜீவ் மீது கொஞ்சம் கிராமம்தான் இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் ராஜு மிமிக்ரி செய்து அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டு இருந்தார். இதை பார்த்த பிரியங்கா, மருமடியும் இவன் பண்ணா ஆரம்பித்துவிட்டானா என்று சலிப்படைந்தார்.

அதற்க்கு அபிஷேக், பாவம் விடு பண்ணிட்டு போறான். நான் கூட அவன சேலஞ் பண்ணேன். முன்பெல்லாம் உன்னுடைய காமெடி நல்லா இருந்தது. ஆனால், இப்போ எனக்கு அடுத்த லெவல் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று சொன்னவுடன், கடுப்பான பிரியங்கா, நீ என்ன ஜட்ஜ்ஜா, நீ என்ன அவன மோட்டிவேட் பண்ற என்று வயிற்றெரிச்சலில் பேசினார். இதனை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement