என்ன ட்ரெஸ் இது ? முதல் நாளே அலப்பறையை ஆரம்பித்த Gp முத்து – வைரலாகும் வீடியோக்கள் இதோ.

0
452
gpmuthu
- Advertisement -

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

-விளம்பரம்-

இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர். அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

இந்த சீசனில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஷிவின் கணேசன், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த முறை ரசிகர்களுக்கு பரிட்சயமான பிரபலங்களை விட முகம் தெரியாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்று கோலாகாலமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ஜிபி முத்து தான் நுழைந்திருந்தார். இவர் நுழைந்த போது ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்திருந்தனர். மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பின்னர் கமல் இவரை அகம் டிவி வழியே தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனக்கு இங்கே தனியயாக இருக்க பயமாக இருக்கிறது, நான் தனியாக ஒன்னுக்கு கூட கழிக்க கூட செல்ல மாட்டேன் என்று ஜிபி முத்து சொன்னது பெரும் கேலியாக இருந்தது.

-விளம்பரம்-

இதைத்தொடர்ந்து பேசிய கமல் உங்களுக்கே அப்படி இருக்கிறது என்றால் இந்த உலகத்தில் முதன் முதலில் தோன்றிய ஆதாமிற்கு எப்படி இருக்கும் என்று வழக்கம்போல ஒரு கதையைச் சொன்னார். இதைக் கேட்ட ஜிபி முத்து ஆதாம்மா? அது யார் என்று எப்போதும் போல மிகவும் வெகுளித்தனமாக கேட்டிருந்தார். இதை கேட்டதும் கமலுக்கு ஒன்றுமே புரியவில்லை வின்னர் ஒரு கட்டத்தில் அங்கிருந்து சென்று விட்டார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடம் பேசிய ஜிபி முத்து சத்யா சீரியல் நடிகை ஆயிஷா அணிந்திருந்த ஆடையை பார்த்து இது என்ன ஆடை என்று கேட்டு கேலி செய்திருந்தார். அதேபோல மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு அங்கு இருக்கும் விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது ஜிபி முத்து இங்கு இரண்டு பாத்ரூம் மட்டும்தான் இருக்கிறது என்று பேசி இருந்தார்.

Advertisement