பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யான். தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிந்து சமவெளி’ என்ற படத்தில் ஒரு கல்லூரி மாணவராக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்திற்கு பின்னர் அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தாமாமா, பொறியாளன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படங்கள் எதுவும் பெரிய அளவு பிரபலமடையவில்லை. ஆனால், 2016 ஆம் ஆண்டு இவர் நடித்த வில் அம்பு திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் பின்னர் இவர் பிக் பாஸ் ரைசாவுடன் நடித்த பியார் பிரேமா காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படமும் மாபெரும் வெற்றியடைந்த்து. கடந்த ஆண்டு நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார். தற்போது இவர் தாராள பிரபு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்து உள்ளார். இந்தியில் ஆயுஷ்மான் குராரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் “தாராள பிரபு. இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். Sperm donation (விந்தணு தானம்) அடிப்படையாகக் கொண்டு ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி உள்ள படம்.
இதையும் பாருங்க : ஸ்லீவ் லெஸ் உடை, டாப் ஆங்கில் போட்டோ ஷூட். அனிகாவின் லேட்டஸ்ட் வீடியோ.
இந்த படத்தில் மருத்துவர் ரோலில் விவேக் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்கிரீன் சைன் மீடியா தயாரித்துள்ளது. வேலை இல்லாத ஹீரோ மருத்துவர் ஒருவரின் ஐடியா பேரில் விந்தணு விற்று நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இடையே காதல், கல்யாணம் என செல்கிறது. தன் நண்பர்கள், அம்மா, மனைவி என யாரிடமும் இந்த விந்தணு தானம் பற்றி சொல்லாமல் மறைத்து விடுகிறார். ஹீரோவின் மனைவி கருத்தரிக்க இயலாமல் போக அந்த மருத்துவரின் உதவியுடன் எவ்வாறு தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்தார் என்பது படத்தின் கதை. சர்ச்சைக்குரிய விந்து தானம், கருவுறாமை ஆகியவற்றை கான்செப்ட்டாக கொண்ட இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் அனிருத், ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா என 8 இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து உள்ளனர். மேலும், தாராள பிரபு படம் மார்ச் 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தாராள பிரபுவின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விஜய் டிவியால் 2.25 கோடி ரூபாய் விலையில் பெறப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தி உள்ளன.