அபிஷேக்குடன் டான்ஸ் வீடியோ வெளியிட்ட ஐக்கி, அபிஷேக்கை திட்டி தீர்த்த ரசிகர்களுக்கு கொடுத்த பதில்.

0
371
Abhishek Iykki
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரமும், வன்மமும் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் குடும்ப உறவினர்களை சந்திக்கும் வாரம் என்பதால் பிக் பாஸ் வீடே ஆனந்த கண்ணீரில் உள்ளது.

-விளம்பரம்-

இரண்டு முறை வெளியேறிய அபிஷேக் :

இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா செய்த வேலையை யாரும் மறந்து இருக்க மாட்டோம். இவருக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் அதிகம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வைத்து உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் இவருக்கு என்று ஒரு தனி வெறுக்கும் படை சேர்ந்து உள்ளது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஐக்கி பெர்ரி, அபிஷேக் ராஜா உடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர் தஞ்சாவூர் தமிழச்சி. ஆனால், இவரை பார்த்தால் பாரின் ரிட்டர்ன் பொண்ணு போல் இருப்பார். மேலும், இவர் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக உள்ளார். இருந்தும் இவர் ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்டதால் தனது உடை, நடை பாவனை எல்லாம் மாற்றி பாரின் பெண்ணாகவே மாறி இருக்கிறார். இவர் பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டு உள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு ஐபோன் காதலி எனும் குறும்படத்தில் நடித்து சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

பின் இவருக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ஜக்கி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஐக்கி பெர்ரி சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி இவர் போட்டோ, வீடியோ என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் அபிஷேக் உடன் நடனமாடிய வீடியோ, இன்டர்வியூ கொடுத்த வீடியோ என்று பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அபிஷேக்குடன் ஐக்கி வெளியிட்ட வீடியோ :

திட்டி தீர்த்த ரசிகர்கள் :

இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார்கள். அதில் ரசிகர்கள் கூறி இருப்பது, ஐக்கி இவனோட எல்லாம் சேராதீர்கள். உங்களுடைய பெயர் கெட்டுப் போய்விடும். ஏன் உங்களுடைய பெயரை நீங்களே கெடுக்கீரிர்கள். தயவுசெய்து அபிஷேக் உடன் சேராதீர்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இப்படி நெட்டிசன்கள் பதிவிட்ட ஒவ்வொருவருக்கும் ஐக்கி பதில் அளித்து உள்ளார். அதில் ஐக்கி கூறியிருப்பது, உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. ஒருவரின் இமேஜையும் கேரக்டரையும் யாராலும் அழிக்க முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

ஐக்கி கொடுத்த அட்வைஸ் :

நம்முடைய செயல்கள் தான் நம்மை பற்றி பேசும். எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் மாற்றும் என்று நான் உண்மையாக நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அனைவருமே மனிதர்கள் தான். ஒருவருக்கு ஒருவர் அன்பும் அக்கறையும் காட்ட வேண்டும். நல்லது கெட்டது என்பது எதுவும் கிடையாது. சந்தர்ப்பங்கள் தான் அப்படி அமைந்து விடுகிறது. எப்போதும் அன்பை பகிருங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement