பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கவின். இவர் ஆர்.ஜேவாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். பின்னர் சிறு சிறு ஷார்ட் பிலிம்களில் நடித்தார். பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு பிறகு பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
ஆனால், சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் கவினுக்கு எக்கச்சக்க பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போது இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ஆர்மிக்கல் கூட உருவானது. மேலும், அடிக்கடி ட்விட்டரில் கவின் சம்மந்தப்பட்ட பல டேக்குகள் அடிக்கடி ட்ரெண்டிங்கில் வந்தது.
அந்த வகையில் இன்றும் கவின் பற்றிய ஒரு டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே கவினின் பிறந்தநாள் தான். கவினுக்கு வரும் 22 ஆம் தேதி பிறந்தநாள், அட ஆமாங்க தளபதி விஜய் பிறந்த அதே தேதியில் தான் கவினும் பிறந்தார். இதையொட்டி கவின் ரசிகர்கள் கவின் பிறந்தநாளுக்கு காமன் டிபி ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்.
அந்த புகைப்படத்தை காமெடி நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஆர்த்தி, நடன இயக்குனர் சதிஷ் என்று பல்வேறு பிரபலங்கள் இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர், இதையடுத்து #KavinBirthdayCDP என்ற ஹேஷ் டேக்கை கவின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர், இதையடுத்து அந்த ஹேஷ் டேக் இந்திய அளவு ட்ரெண்டிங் டேக்கில் இடம்பிடித்தது.