இன்னும் ஒரு வாரம் இருந்திருந்தால் கவினுக்கு இவ்வளவு பணம் தான் கிடைத்திருக்கும்.! கவின் கணக்கு சரி தான்.!

0
2766
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சத்தை வாங்கி கொண்டு வெளியேறியுள்ளார் என்ற செய்தி தான் சமூக வலைதளத்தில் தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் கவின் எடுத்த இந்த முடிவு கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

-விளம்பரம்-
kavin

இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே கவினுக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ஆதரவு இருந்து வந்தது. கவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு ஹேஷ்டெக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் #Weadmirekavin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் முதல் இடத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இத்தனை ஆதரவுகள் இருந்தும் கவின் வெளியேறியதற்கு முக்கியே காரணமே பணம் தான் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது கவின் இதுவரை ஒரு நாளைக்கு 30 ஆயிரம் என்ற வீதம் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 95 நாட்களுக்கு 28,50000 ரூபாயை பெற்றுள்ளார்.

ஒருவேளை மீதமுள்ள இந்த 5 நாட்கள் இருந்திருந்தால் அவர் 5 நாட்களுக்கு 1,50000 ரூபாயை மட்டுமே பெற்றிருப்பார். எனவே, தற்போது கிடைத்துள்ள 5 லட்சத்தை எதற்காக வீணாக்க வேண்டும் என்று கவின் முடிவு செய்துள்ளதாகவும் சில செய்திகள் பரவி வருகிறது. எனவே, தான் இந்த வாரம் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு கவின் வெளியேறியதாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கபட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement