பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வார டாஸ்கை யார் சுவாரசியம் இல்லாமல் செய்த்து என்று கேட்ட போது லாஸ்லியா மற்றும் அபிராமி இருவரும் தாமாக முன்வந்து தங்களது பெயரை சொன்னார்கள். இதனால் கொஞ்சம் அப்சட் ஆன கவின், இந்த டாஸ்கை ஸ்வாரசியம் குறைவாக செய்த்து ஷெரின் மற்றும் சாக்க்ஷி தான் என்றார். இருப்பினும் விடாபிடியாக இருந்த லாஸ்லியா நான் தான் விதிகளை மீறினேன் இதனால் என்னை ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்று சென்றுவிட்டார்.
சிறை தண்டனை ஏதோ பிக்நிக் செல்வது போல மிகவும் ஜாலியாக எடுத்துக்கொண்டனர். இதனால் தர்ஷன் கூட ‘ ஜெயில் என்பது ஒரு தண்டனை அதனை இப்படி விளையாட்டாக எடுத்துக்கொண்டால் எப்படி ‘ என்று கூறியிருந்தார். இப்படி ஜெயிலை விளையாட்டாக எடுத்துக்கொண்ட லாஸ்லியா மற்றும் அபிராமி இருவரும் பிக் பாஸ் தகுந்த பாடத்தை கற்பித்தார்.
இதையும் பாருங்க : ஆடையின்றி நடிக்க நானும் தயார்.! ஷாக் கொடுத்த பிரபல பிக் பாஸ் நடிகை.!
இதனால் அபிராமி, நாங்கள் தெரியாமல் விளையாடி விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் பிக் பாஸ் என்று மன்னிப்பு கேட்டார். இருப்பினும் வலிக்காதது போல நடித்த லாஸ்லியா எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை அபிராமியை மட்டும் அனுப்பிவிடுங்கள் என்றார்.
அபிராமி பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் போது சிறை வெளியில் நின்று கொண்டிருந்த கவின் லாஸ்லியாவின் கண்ணத்தை கிள்ளினார். இதானை பார்த்த சாக்க்ஷியின் முகம் கொஞ்சம் கருகியதையும் அந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிந்தது.