நான்தான் விதிகளை மதிக்கிறேன் என்று பெருமை பேசிய லாஸ்லியா.! அடுத்த கணமே மொக்கை கொடுத்த பிக் பாஸ்.!

0
3708
losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி 66 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

இந்த டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக ஏற்கனவே வனிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் முகென் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இன்று நடைபெற உள்ள அடுத்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்கில்முகென், வனிதா, சேரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த டாஸ்கில் வெற்றி பெறுவார்கள் அடுத்த வார தலைவராக பொறுப்பு ஏற்பார்கள்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா.! 

- Advertisement -

அதேபோல அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தார். ஆனால், அது எந்த பவர் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ஒளிபரப்பான இரண்டாவது பிரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் அதிக பிரபலம் உடையவர்கள் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்தனர்.

அந்த ப்ரோமோவில் வனிதா தன்னை அதிக பிரபலம் உடைய நபர் என்று அறிவித்துக் கொண்டார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் நான் தான் பிக் பாஸ் வீட்டில் விதிகளை இதுவரை மீறிய தே இல்லை என்று பெருமை பேசி வருகிறார் லாஸ்லியா. அவர் சொல்லி முடித்த அடுத்த கணமே லாஸ்லியாவின் மைக்கை மாற்றச் சொல்லி பிக்பாஸ் அறிவித்தவுடன் மற்ற போட்டியாளர்களை அனைவரும் சிரித்து விடுகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement