பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற தன் அண்ணனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல எதிர்பார்களுடன் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு இருந்தார்கள். மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6:
இந்த நிகழ்ச்சி தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறித்த கூறப்பட்டு இருந்தது. இந்த முறையும் பலர் புதிய முகங்களாக இருக்கின்றனர். அதேபோல் இந்தமுறையும் நிகழ்ச்சியில் ஷிவின் கணேசன் என்ற திருநங்கை பங்கேற்று இருக்கிறார்.
போட்டியாளர்கள் குறித்த தகவல்:
இவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், சில போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மணிகண்டன் குறித்த தகவல்:
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் மாஸ்டர் மணிகண்டன் ஒருவர். இவர் மிகப் பிரபலமான டான்ஸர் ஆவார். இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்கள், சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். பின் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் ஆவார். தற்போது இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு:
இந்த நிலையில் இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் என்னுடைய அண்ணன் மணிகண்டனை புஜ்ஜி என்றுதான் அழைப்பேன். என் தந்தையின் மறு அவதாரமான என் சகோதரனை நான் தவறவிட்ட நாட்கள் உண்டு. ஆனால், இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பை என்னுடைய சகோதரர் மணிகண்டனுக்கு வழங்கிய விஜய் டிவிக்கு நன்றி. தயவு செய்து என் சகோதரனுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள். வாழ்த்துக்கள் புஜ்ஜி என்று பதிவிட்டு இருக்கிறார்.