அங்க சுத்தி இங்க சுத்தி, தோனியையும் விமர்சித்த மீரா மிதுன் – கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
1230
meera

சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாகவே மிகவும் சர்ச்சைக்குரிய நபராக பேசப்பட்டு வருபவர் மீராமிதுன் நடிகையும் மாடல் அழகியுமான இவர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது பிரபலத்தை சம்பாதிக்கலாம் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிய மீராமிதுன் இறுதியில் ரசிகர்களின் மத்தியில் அவப்பெயரோடு வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னரும் பிரபலத்தை பெற என்னென்னவோ சர்ச்சையான விஷயங்களை செய்து வருகிறார் ஆனாலும் இவருக்கு பிரபலம் கிடைத்தபாடில்லை.

கடந்த சில தினங்களாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் இவர் சமூக வளைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு அறிவித்ததை கூட விமர்சித்து தோனியின் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் என்ற பட்டப் பெயருடன் திகழ்ந்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர்.இந்த நிலையில் தனது ஒய்வு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தோனி, இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

தோனியை எப்போதும் சென்னை ரசிகர்கள் தல என்று தான் அழைத்து வருகின்றனர். தோனியின் இந்த ஓய்வு அறிவிப்பை கேட்டு தோனியின் ரசிகர்கள் மிஸ் யூ தல போன்ற ஹேஸ் டேக் போட்டு தங்களது வருத்தங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ள மீரா மிதுன், தோணியை ஏன் மீடியாக்கள் தல என்று குறிப்பிடுகிறார்கள், தல என்றால் அது அஜித் தான், தளபதி என்றால் அது ஸ்டாலின் தான் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement