சனம் ஷெட்டியை டுபாகூர் என்று சொன்ன பாலாஜி – மறைமுகமாக கேலி செய்த மீரா மிதுன்.

0
1391
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. ஒரு வாரம் ஆன நிலையில் ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதாவிற்கு இடையே ஒரு ‘எச்சில்’ பஞ்சாயத்து ஓடியது. அதற்கு நேற்று முன்தினம் கமல் பஞ்சாயத்து செய்து வைத்தார். இந்த பிரச்சனைக்கு பின்னர் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாசின் ‘டுபாகூர்’ பஞ்சாயத்திற்கு தீர்ப்பு வழங்கி இருந்தார் கமல் அது என்ன தான் பிரபாகர் பஞ்சாயத்து என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார்.

- Advertisement -

இதனால் கொஞ்சம் மன வருத்தம் அடைந்த சனம் செட்டி அந்த இடத்திலிருந்து வந்துவிட்டால் அதன் பின்னர் பாலாஜி முருகதாஸை தனியாக அழைத்து சனம் செட்டி பேசுகையில் நீங்கள் டுபாக்கூர் நிகழ்ச்சி என்று சொன்னது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சனம் செட்டி கூறி இதற்கு நீங்கள் அந்த இடத்தில் இருந்தது எனக்கு தெரியாது என்று கூறினார் பாலாஜி மேலும் இதை நான் உங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் கூறினார் அதன் பின்னரும் இது ஒரு டுபாக்கூர் தான் என்பதை நான் வெளியில் வந்து நிரூபிக்கிறேன் என்று சவால் விட்டார் பாலாஜி.

இப்படி ஒரு நிலையில் நடிகை மீரா மிதுன், சனம் ஷெட்டியை மறைமுகமாக தாக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் டுபாக்கூர் என்று பதிவிட்டு கேலி செய்து இருக்கிறார். ஏற்கனவே சம்யுக்தா, மீரா மிதுனை மறைமுகமாக கேலி செய்யும் விதமாக நான் என்னை சூப்பர் மாடல் என்று சொல்ல மாட்டேன் என்று கூறி இருந்தார். அதற்கு பதில் அளித்த மீரா மிதுன், அவருக்கு என் மீது பொறாமை என்று மீரா மிதுன் கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement