இந்த மூன்று பேரில் ஒருவர் தான் ‘Eviction Free Paas’-ஐ வெல்லப்போகும் நபரா ? எப்படினு பாருங்க.

0
683
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்று கிழமை (அக்டோபர் 4 ) துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிகரமாக நேற்றோடு வெற்றிகராக முதல் வாரத்தை நிறைவடைந்து இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை போட்டியாளர்கள் முழுமையாக ஒரு வாரம் கழித்து உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே எந்த ஒரு பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை. இடையில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதேபோல முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் எந்த ஒரு எலிமினேஷனும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது. இதில் ஏற்கனவே ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா, அஜீத், ஷிவானி, சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் சுரேஷ் இந்த வார தலைவராக தேர்ந்துடுக்கபட்டிருந்ததால் அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சனம் ஷெட்டி (11 Vote), ஷிவானி (6 Vote) சம்யுக்தா(5 vote) ரேகா (4 vote), ஆஜீத் (2 Vote), ரம்யா (2 Vote), கேப்ரில்லா (2 vote) ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக ‘Eviction Free Paas’ என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கைப்படற இந்த வாரம் தகுயற்றவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரில் கலந்து பேசி இறுதியில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ‘Eviction Free Paas’ ஐ வெற்றி பெரும் நபர் இந்த சீசன் முழுதும் ஏவிக்ஷனில் இடம்பெற மாட்டார்.

அந்த நபர் யார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று வெளியான பிரமோ ஒன்றில் கூட இறுதியில் ரம்யா பாண்டியன் அஜித் மற்றும் சுரேஷ் மட்டும்தான் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அதேபோல பிரம்மாவின் இறுதியில் கம்மான்டா என்று ரியோ கூறியிருந்தார். கண்டிப்பாக அவருக்கு பிடித்த ஒரு நபர் தான் ‘Eviction Free Paas’ ஐவென்று இருப்பார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே சுரேஷுக்கும் ரியோவிற்கும் ஏதோ மனஸ்தாபம் சென்று கொண்டிருக்கும் நிலையில் கண்டிப்பாக சுரேஷ் வெற்றி பெற்றிருந்தால் ரியோ இப்படி செய்திருக்கமாட்டார்.

-விளம்பரம்-

அதேபோல ரம்யா பாண்டியன் வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் ரம்யா வீட்டின் தலைவராக இருந்தபோது அவருக்கு எதிராக சில புகார்களை போட்டியாளர்கள் எழுதி புகார் பெட்டியில் போட்டபட்டு இருந்தது. இந்த புகார் பெட்டியுடன் கமல் கடந்த வாரம் பிக்பாஸ் மேடையில் நின்று கொண்டிருந்தார். ஆனால், அது குறித்து கமல் விரிவாக எதையும் பேசவில்லை. அப்படியெனில் இந்த வாரம்’Eviction Free Paas’ ரம்யா பாண்டியன் வெற்றி பெறத்தான் அந்த புகார் பெட்டி விஷயத்தை பிக்பாஸ் மூடி மறைத்தார் என்பதும் தெரியவில்லை. ஒரு வேலை ரம்யா மற்றும் அஜீத் இறுதி வரை இருந்திருந்தால் கண்டிப்பாக ரம்யா, ஆஜித்திற்காக விட்டு கொடுத்து இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement