சொந்த நாட்டில் இருந்து மீண்டும் இந்தியா திருப்பிய முகென்.. வைரலாகும் புதிய வீடியோ..

0
2407
mugen

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சில ஆண்டுகளாகவே மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது. மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுன்னு கூட சொல்லலாம். மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக பண்டிகை போல சிறப்பாக முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.மேலும்,முகென் தன்னுடைய வீடா முயற்சியாலும், தன் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடினார் .

இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆவார்.இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பன்முக திறமைகளை கொண்டுள்ளவர்.மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள்.மேலும்,இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் உலக மக்கள் அனைவரின் ஆதரவையும், அன்பையும் பெற்று, அதிக வாக்குகளோடு வெற்றியும் பெற்றார்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் பாடிய பாடல் செம்ம ஹிட்டு .மேலும், ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதலியுடன் தர்ஷன் எங்கு சென்றுள்ளார் பாருங்க ..

- Advertisement -

இதோடு அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மற்ற போட்டியாளர்களை சந்தித்து மகிழ்ந்து வந்திருந்தார். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் நடுநிலையாக தான் விளையாடி வந்து கொண்டிருந்தார்.மேலும்,அவர் எந்த ஒரு பெரிய பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளவில்லை. அபிராமி பிரச்சினையைத் தவிர. அது அபிராமியை கிளம்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த வெற்றியினை இந்தியாவில் கொண்டாடி முடித்து விட்டு முகென் சில தினங்களுக்கு முன்னர் தான் தனது பூர்வீகமான மலேசியாவிற்கு சென்றார். இந்நிலையில் முகென் வரவை கண்டு மலேசிய மக்கள் உற்சாகத்திலும்,ஆனந்தத்திலும் கொண்டாடினார்கள்.அதோடு விமான நிலையத்திலுருந்தே முகெனை பார்த்து ரசிகர்கள் வாழ்த்தியும், பாராட்டியும் வருகிறார்கள்.

மேலும்,மலேசிய மக்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் முகெனுக்கு மூச்சு திணற வைத்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சுற்றியது. அதில் சிறுமி ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது முகின் பாடிய “நீதான் நீதான்” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். டைட்டில் வின்னர் ஆன சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் அவருடைய பாடல்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானது .இதனைத்தொடர்ந்து முகென் மலேசியா மக்களுடன் பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வந்தது அனைவருக்கும் தெரிந்தே .

-விளம்பரம்-

இந்நிலையில் இந்திய ரசிகர்கள் முகென் மீண்டும் இந்தியா வரமாட்டாரா? என்று கவலையில் உள்ளார்கள்.உண்மைய சொன்னால் முகென் மீண்டும் இந்தியாவுக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறினார்கள்.ஏன்னா! பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே முகென், நம்ப தளபதி விஜய் அவர்களின் “தளபதி 64” படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என இயக்குனர் கூறியிருந்தார்.அதனால, கண்டிப்பா முகென் திருப்பியும் வருவார் என்று கூறினார்கள்.அப்படி அனைவரும் ஆசைப்பட்ட மாதிரி முகென் ராவ் அவர்கள் மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்கள் ரசிகர்கள்.

Advertisement