மேலே காலை தூக்கி போட்ட அபிராமி.! குரங் அஜார் என்று மலாயில் எச்சரித்த முகின்.! அப்படினா என்ன தெரியுமா.!

0
72393
Abhirami

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே புது புது ரொமான்ஸ் போட்டியாளர்கள் மத்தியில் ஓடிக் கொண்டுதான் வருகிறது. அதில் தற்போது புதிதாக ஆரம்பித்ததுதான் அபிராமி மற்றும் முகென் இடையேயானரொமான்ஸ். கடந்த சில நாட்களாகவே அபிராமி முகென் அதிக அன்பு காட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க் ஒன்றில் கூட அபிராமி அனைவர் முன்பும் முகெனிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லியிருந்தார். இருப்பினும் அபிராமியை ஒரு நல்ல நண்பராக தான் பார்த்து வருகிறார் முகென். அதற்கு முக்கிய காரணமே முகெனுக்கு காதலி இருக்கிறார் என்பதால் தான்.

Abhirami-mugen

அதே போல நேற்றைய நிகழ்ச்சியில் பட்டிமன்றம் போல ஒரு டாஸ்க் ஒன்றும்நடத்தப்பட்டது. அப்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பது நட்பா இல்லை அதையும் தாண்டி புனிதமானது என்று இரு தரப்பினரும் வாதாடினர். அப்போது எதிர் தரப்பில் இருந்த அபிராமி என்னுடன் முகென் வைத்திருப்பது நட்பு மட்டும் இல்லை, அதற்கும் மேல் புனிதமானது என்று கூறியிருந்தார். ஆனால், அதனை எதிர்த்துப் பேசிய முகென் அபிராமியுடன் நான் வைத்திருப்பது நட்பு மட்டும்தான் அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று தெளிவாகவே சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு விதி இருக்கிறதா.! நேற்று தான் இது தெரியவந்தது.! 

- Advertisement -

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் முகென், , சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோர் லிவ்விங் ஏரியாவில் இருக்கும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அபிராமி , முகென் மீது இரண்டு காலையும் மேலே போட்டு சேரில் சாய்ந்தபடி அமர்ந்தார். இதனால் கொஞ்சம் சங்கடம் அடைந்த முகென், அபிராமியை ‘குரங் அஜார்’என்று மலாய் பாஷையில் எச்சரித்தார்.

இதனால் ஒன்றும் புரியாத அபிராமி திருதிருவென முழித்ததார். பின்னர் முகென் மீண்டும் அதே வார்த்தையைக் கூறி எச்சரிக்க அபிராமி,முகென் மீது இருந்து காலை எடுத்து விட்டு முகத்தை தூக்கிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு சென்று விட்டார். அபிராமி மகன் மீது காலை போட்டதும் முகென் கூறிய ‘குரங் அஜார்’ என்ற சொல் மலாய் மொழியாம். அப்படி என்றால் மரியாதை குறைவாக நடப்பது என்று அர்த்தமாம்.

-விளம்பரம்-

என்னதான் அபிராமி மற்றும் முகென் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தாலும் ஒரு ஆண் என்றும் பாராமல் அனைவர் முன்பும்முகென் மீது அபிராமி காலை போட்டது முகெனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவரது முக பாவத்திலிருந்தே தெரிந்தது. அதனால் தான் அபிராமியை மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளாதே என்று எச்சரித்துள்ளார் முகென்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement