‘Oye, திருமணமான பேச்சுலரே வீட்டுக்கு வந்ததும்’ – தன் கணவரின் முடிவு குறித்து சிபி மனைவி என்ன கூறியுள்ளார் பாருங்க.

0
668
ciby
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய சிபி குறித்து அவரின் மனைவி சொன்ன கருத்து வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 94 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் நேற்று வரை பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சிபி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருந்தனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகிஇருந்தனர் . இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

-விளம்பரம்-

இந்த சீசன் அடுத்த வாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது . கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருந்தார் சரத் குமார். மேலும், அந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் 5 , 6, 7, 8, 10, 11 லட்சம் என்று படிப்படியாக தொகை ஏறிக்கொண்டே போனது.

இதையும் பாருங்க : சிபிக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ – பிக் பாஸுக்கு பின் வெளியில் வந்த சிபி, ரசிகர்கள் அன்பில் திளைத்த வீடியோ இதோ.

- Advertisement -

12 லட்சத்துடன் வெளியேறிய சிபி :

இப்படி ஒரு நிலையில் நேற்று 12 லட்ச ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் சிபி. மேலும், நிரூப் சொன்னது போல இந்த சீசனில் ராஜு மற்றும் பிரியங்கா தான் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், பாவனி, தாமரை, அமீர் ஆகிய மூவரில் அமீர் நேரடியாக பைனலுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சியிருப்பது நிரூப் மற்றும் சிபி இருவரும்தான். வரும் வாரத்தில் எப்படியும் ஒருவர் வெளியேறி ஆக வேண்டும். எனவே, தானோ அல்லது நிரூப்போதான் எவிக்ட் ஆவோம் என நினைத்து சிபி இந்த முடிவை எடுத்தாரோ என்பது பலரின் கேள்வி.

தாமரையை பற்றி யோசித்த சிபி :

மேலும், இந்த பெட்டியை எடுப்பதற்கு முன்பாக தாமரையிடம் மட்டும் பல முறை கேட்டார் சிபி. ஆனால், தாமரை தனக்கு அந்த பணம் வேண்டாம் என்று சொன்ன பிறகே சிபி, பெட்டியை எடுத்துக்கொண்டார். மேலும், இதுகுறித்து பேசிய போது தாமரையின் குடும்ப பின்னணியை மனதில் கொண்டு, பணத்தை எடுப்பதற்கு முன்பு அவர்குறித்து மட்டுமே யோசித்தேன். ஆனால், தாமரை பிக்பாஸ் வீட்டில் இருக்க விரும்புகிறார் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சிபி சொன்ன காரணம் :

இருப்பினும் சிபியின் இந்த முடிவை போட்டியாளர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கேட்கப்பட்ட போது நான் வரிசைபடுத்தும் டாஸ்கில் மிகுந்த நம்பிக்கையுடன் தான் முதல் இடத்தில் நின்றேன். அந்த நம்பிக்கை இப்போ எனக்கு இல்லை. இப்போது எனது தன்னம்பிக்கை குறைந்துவிட்டது. இதற்கு பின் இந்த வீட்டில் வெற்றி பெறுவேன் என்று பொய்யாக நடித்து என்னால் இருக்க முடியாது என்று குறி இருந்தார். இந்த நிலையில் சிபியின் இந்த முடிவை பற்றி சிபியின் மனைவி ஸ்லோகா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சிபி மனைவி என்ன சொன்னார் :

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘வழக்கமாக நான் உன்னை பாராட்ட மாட்டேன். ஆனால், இப்போது சந்தோஷத்தில் பூரித்துபோயிருக்கிறேன். உன்னை நினைத்து எனக்கு மிக மிக பெருமையாக இருக்கிறது. நீ தலை நிமிர்ந்து வெளியில் வந்து இருக்கிறாய். ஓய் திருமணமான பேச்சுலரே வீட்டுக்கு வந்து எனக்கு டீயும் ஆம்லெட்டும் போட்டு குடு’ என்று கூறி இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement