ஆரம்பம் முதலே அக்ஷரா மீது காண்டில் இருக்கும் பிரியங்கா – இதுவரை என்னென்ன செஞ்சிருக்கார் பாருங்க. வீடியோ இதோ.

0
653
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றாலே போதும் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பிரியங்கா பெயர் தான். அந்த அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் பிரியங்கா. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

-விளம்பரம்-

வழக்கம் போல் ப்ரியங்கா பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய நகைச்சுவையும், அட்டகாசத்தையும் காண்பித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா, அக்ஷ்ராவை கார்னர் செய்கிறார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பாவனியிடம் அக்ஷரா பற்றி இதுவரை எந்த ஒரு டாபிக்கையும் பேசவில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அக்ஷரா குறித்து பிரியங்கா முதல் டாஸ்க் முதல் என்னவெல்லாம் செய்துள்ளார் என்பதையும் அவரிடம் யார் பேசினாலும் அவர்களையும் எப்படி ட்விஸ்ட் செய்து இருக்கிறார் என்பதையும் குறும்படம் போட்டு காண்பித்து வச்சி செய்து உள்ளனர் நெட்டிசன்கள். அந்த வீடியோ தற்போது சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே, பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்களில் அக்ஷரா, காகிதத்தில் எதோ எழுதி அதை பாத் ரூமில் போட்டதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரியங்கா, நான் சத்தமாக பேசுறதினால் நீ நல்ல பொண்ணு என்று வெளியில் பார்க்கிற மக்களுக்கு வேற மாதிரி தெரியும். நீ எது பேசுனாலும் நேரடியாக பேசு. ஆனால், நீ பண்ணறதை பார்த்தால் நாங்கள் ஏதோ உன்னை டார்கெட் பண்ணுற மாதிரி வெளியில் தெரியும். எது ரொம்ப தப்பு, அசிங்கமாக இருக்கு என்று பிரியங்கா கூறினார்.

உடனே அக்ஷராவுக்கும் ப்ரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இதே பிரியங்கா இந்த பிரச்சனை நடந்து சில நாட்களுக்கு முன்னர் நிரூப்பிடம் அக்ஷரா பற்றி கிசு கிசுத்தப்போது அவரின் நிரூப் கையை பிடித்து ஏதோ தனது விரலால் எழுதி காட்டினார். இதை கமலே சுட்டி காட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement