கிழிந்த பிரியாகாவின் முகத்திரை – இதோ அவர் கேட்ட குறும்படம். நிரூப் என்ன சொல்லி இருக்கார் பாருங்க

0
655
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 55 அந்நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை 9 பேர் வெளியேறிய நிலையில் போட்டியாளர்களுக்குள் அடிக்கடி சண்டை வெடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் தாமரை செல்வியால் அடிக்கடி எதாவது சன்டைகள் எழுந்துவிடுகிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் தற்போது சவுண்டு பார்ட்டி என்றால் அது நிச்சயம் தாமரை செல்வியாக தான் இருக்கும். இதுவரை தாமாரை செல்வி பிக் பாஸ் வீட்டில் சண்டை இழுக்காதா ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பிரியங்கா மற்றும் தாமரை செல்விக்கு தான் பிரச்சனை சென்றது.

- Advertisement -

இந்த விவகாரத்தில் ப்ரியங்காவின் பெயர் அடிக்கடி டேமேஜ் ஆகி வருகிறது. அதேபோல கடந்த சில நாட்களாகவே ப்ரியங்கா தன்னுடைய நண்பர் என்று கூறிக் கொண்டு வரும் நிரூப்பிடம் அடிக்கடி பிரியங்கா சண்டையிட்டுக் கொண்ட தான் வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் செய்தி வாசிக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கில் நிரூப் பிரியங்கா அணியில் தான். இருந்தார் ஆனாலும், பிரியங்கா மற்றும் நிரூப்பிற்கு டாஸ்க் ரீதியாக சில எதிர் கருத்துக்கள் விளைந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று ஒளிபரப்பான ரோபோவில் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் ஒரு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதாவது செய்தி வாசிக்கும் போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பிரியங்கா தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

-விளம்பரம்-

ஆனால் இந்த டாஸ்க் ஆரம்பிக்கும் முன்னரே அனைத்தையும் உன்னிடம் கலந்து ஆலோசித்து பின் தானே முடிவு எடுத்தோம் என்று ப்ரியங்கா கூறினார். மேலும் இந்த விஷயத்தில் அன்று என்ன பேசினார் என்பதை குறும் படம் போட வேண்டும் என்றும் கூறினார் ப்ரியங்கா. இப்படி ஒரு நிலையில் பிரியங்கா கேட்ட அந்த குறும்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதில் பிரியங்கா மற்றும் அபிஷேக் இருவரும்தான் என்ன செய்ய வேண்டும் என்பதை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சிபி தான் நிரூப்பிடம் இதில் உனக்கு உடன்பாடு இருக்கிறதா என்று கேட்டாரே தவிர பிரியங்கா இதை பற்றி கேட்கவில்லை மேலும் இது அவர்களுடைய புரிதல், எனக்கு முற்றிலும் வேற புரிதல் இருக்கிறது என்று நிரூப் கூற முற்படும் போதும் அவருடைய வாயை அடைத்த பிரியங்கா.

Advertisement