‘முன்னாடி ஒரு பேச்சு பின்னாடி ஒரு பேச்சு’ – பல குறும்படங்கள் போட்டு பிரியங்காவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
242
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. கடந்த சீசன்களை விட இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். அதிலும் இந்த முறை ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். குறிப்பாக இந்த முறை தெரிந்த முகங்களை விட தெரியாதவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். வழக்கம்போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு சலசலப்பும் சச்சரவும் தொடங்கிய ஆரம்பித்துவிட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து உள்ளது.

-விளம்பரம்-

நாட்கள் செல்லச் செல்ல பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டிகள்,சவால்கள் அதிகம் ஆகுவதால் போட்டியாளர்களுக்குள் வன்மம் தொடங்கி இருக்கிறது. இதனிடையே வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டில் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெறும். இந்நிலையில் இந்த வாரமும் தலைவர் பதவிக்கான போட்டியில் தாமரை, அக்ஷரா, ராஜு, அபிநய், வருண், இமான் அண்ணாச்சி ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் யார் தலைவர் பதவிக்கு தகுதி ஆனவர் என்று போட்டி வைக்கப்பட்டது. அதில் தாமரை தலைவர் போட்டிக்கு தகுதி இல்லை என்று பிரியங்கா கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : இவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் – வெளிநாட்டில் டிடியை கவர்ந்த அந்த நபர் யார் பாருங்க.

- Advertisement -

இதனால் பிரியங்காவுக்கும், தாமரைக்கும் இடையே நேற்றைய எபிசோடில் பயங்கர கலவரம் வெடித்தது. அப்போது பிரியங்கா, நாங்கள் 18 பேரும் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருந்தாலும் நீ வீட்டை பெருக்கி, சுத்தம் செய்து, சமையல் செய்து, பாத்திரம் கிளின் பண்ணி வைப்ப என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், நீ தலைவர் போட்டிக்கு தகுதியானவள் இல்லை என்று தாமரை இடம் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் தாமரை கொந்தளித்து பிரியங்கா இடம் சண்டை போடுகிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது.

உடனே பிரியங்கா, நீ மனதிற்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் முகத்தில் வேற மாதிரி காட்டுகிறாய். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நீ உன்னுடைய ஃபேஸ் ரியாக்சன் காட்டி இருந்தாய் என்று சொன்னார். உடனே தாமரை, நான் என்ன ரியாக்சன் காமிச்சேன் என்று ப்ரியங்காவிடம் கேட்கிறார். பின் பிரியங்கா, விளக்கம் கொடுக்க அந்த பக்கம் அக்ஷரா வருகிறார். உடனே தாமரை, அக்ஷ்ராவிடம் நம்ப ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கும் போது என்ன ரியாக்சன் காண்பித்தோம் என்று தாமரை கேட்கிறார்.

-விளம்பரம்-

அப்போது அக்ஷ்ரா, எனக்கு என்ன ஞாபகம் இல்லை, அந்த மாதிரி எதுவும் தெரியல என்று சொல்கிறார். ஆனால், உடனே பிரியங்கா நான் உன்னை பற்றி எதுவும் சொல்லவில்லை என்று ஜகா வாங்கிவிடுகிறார். இப்படி இது சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது.இதனை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து பயங்கரமாக பிரியங்காவை கழுவி ஊற்றி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிரியங்காவின் செயல் தவறானது.

தாமரை எல்லா வேலை செய்வதற்கு உரிமை இருக்கும் போது தலைவர் போட்டிக்கு தகுதி இல்லை என்று சொல்வதெல்லாம் தேவையற்ற வார்த்தை என்று பிரியங்கள் திட்டி வருகிறார்கள். விஜய் டிவி மூலம் சம்பாதித்த மொத்த பெயரையும் இந்த ஒரு வீடியோவின் மூலம் பிரியங்கா அழித்து விட்டார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பிரியங்காவை கழுவி ஊற்றிய வருகிறார்கள்.

Advertisement