பிரியங்காவிற்கு அடுத்தடுத்து பறிபோகும் ஆங்கரிங் வாய்ப்பு – சூப்பர் சிங்கரில் இனி இவர் தான் ஆங்கர்.

0
478
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு இணையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடிக்கும் தொகுப்பாளர்கள் என்றால் ஒரு சில பேரு தான். அதில் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் பிரியங்கா.

-விளம்பரம்-

இவருடைய நகைச்சுவை பேச்சாலும், பாடி லாங்குவேஜ் மூலமும் மக்கள் மத்தியில் சீக்கிரமாகவே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வந்தார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று பிரியங்காவை சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : வெளியானது வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ – வீலிங் செய்து விழுந்து வாரியுள்ள அஜித் (என்ன ஒரு டெடிகேஷன் )

- Advertisement -

இந்நிலையில் கூடிய விரைவில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்க வாய்ப்பில்லை. மேலும், இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து சிவாங்கி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இதற்கு முன்பே இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.

தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சிவாங்கி அப்பப்ப ஆங்கரிங் செய்திருந்தாலும் தற்போது முழுநேர ஆங்கிரி ஆகவே சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாறப்போகிறார். இதனால் சிவாங்கியின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். ஏற்கனவே பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை ம க ப தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement