இந்த வாரம் ஜெயிலுக்கு சென்ற இரண்டு பேர் – ஒன்னு பாலா, இன்னொருத்தர் யாரு பாருங்க.

0
573
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இதுவரை 6 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தி என்று 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் இன்னும் 15 போட்டியாளர்கள் மீதம் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மணிக் கூண்டு டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் குழுவிற்கு 3 நபர்களாக பிரிந்து 5 குழுக்களாக விளையாடினார்கள். இதில் சனம் செட்டி, நிஷா, அனிதா ஆகிய மூவர் ஒரு குழுவாகவும் ரியோ கேப்ரில்லா ஆரி ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும். அர்ச்சனா, சம்யுக்தா, சோம் சேகர் ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும் ஷிவானி அஜித் ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும்.

-விளம்பரம்-

பாலா அனிதா சுசித்ரா ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும் தனித்தனி குழுக்களாக பிரிந்து விளையாடி வந்தார்கள். தொடர்ந்து 45 மணி நேரம் இரவு பகல், காத்து மழை என்று பாராமல் இந்த டாஸ்கில் பாலாஜியை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கை சீரியஸாக மேற்கொண்டனர். இந்த டாஸ்கில் கடிகாரமாக செயல்படும் அணி 3 மணி நேரத்தை கணக்கிட்டு கூற வேண்டும் என்பது தான் விதி. இதில் ஒவ்வொரு அணியும் 3 முறை கடிகார டாஸ்கை செய்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் இந்த டாஸ்க்கான முடிவுகள் வந்தது.ஆனால், பாலாஜி நினைத்தது போல அல்லாமல், ஒவ்வொரு 3 மணி நேரத்தை கணிக்க அணிகள் எடுத்துக்கொண்ட நேரத்தை கணக்கிட்டார் பிக் பாஸ். அதாவது 3 மணி நேரத்தை கணிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் குறைந்த நேரத்தை எடுத்துக்கொண்டாலும் இரண்டையும் கணக்கு செய்து அதை கூட்டி தான் இந்த டாஸ்க் முடிவு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த டாஸ்கில் பாலாஜி அணி ஒட்டு மொத்தமாக 3 மணி நேரம் 4 நிமிடம் எடுத்துக்கொண்டு கடைசி இடத்திற்கு வந்துள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த டாஸ்கில் இறுதியாக வந்துள்ள பாலாஜி, ரம்யா, பாலா ஆகிய மூன்று பேரில் யாராவது 2 பேரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று பிக் பாஸ் அறிவிக்க பாலா மற்றும் சுச்சி இருவரையும் மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement