பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு விதி இருக்கிறதா.! நேற்று தான் இது தெரியவந்தது.!

0
11403
Sakshi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் இந்நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்ல பல்வேறு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று போட்டியாளர்களுக்கு லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் சிலர் ஸ்மோக்கிங் ஏரியாவுக்கு சென்றதால் மதிப்பெண்கள் பறிக்கப்பட்டது போட்டியாளர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். நீச்சல் குளத்தில் தண்ணீர் கிடையாது, அதேபோல தண்ணீர் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படும் என்று ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு பாத்ரூம் அருகில் இருந்த ஸ்மோகிங் அறை தற்போது கார்டன் ஏரியாவில் மாற்றப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சின்ன குகை போல இந்த ஸ்மோக்கிங் அறை இருக்கின்றது.

- Advertisement -

பொதுவாக இந்த அறைக்குள் அதிகம் செல்வது பெண்கள் தான் அதிலும் குறிப்பாக ஷெரின், சாக்க்ஷி, அபிராமி ஆகியோர் தான் இந்த அறைக்குள் அதிகம் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் ஸ்மோக்கிங் ஏரியா லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்ணில் இருந்து 100 மதிப்பெண்கள் பறிக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணமே நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி,அபிராமி, ஷெரின் ஆகிய மூவரும் ஸ்மோக்கிங் ஏரியாவில் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதனால்தான் லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்னிலிருந்து 100 மதிப்பெண்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஸ்மோக்கிங் ஏரியாவில் ஒருவருக்கு மேல் செல்லக் கூடாது என்ற ஒரு விதி இருக்கிறதாம். ஆனால், நேற்று ஒரே நேரத்தில் மூன்று பேர் அமர்ந்து இருந்ததால் 100 மதிப்பெண்கள் பறிக்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸில் இப்படி ஒரு விதி இருக்கின்றது என்பது நேற்று தான் பார்வையாளர்களுக்கு தெரியவந்தது. அதே போல உண்மையில் இந்த ஸ்மோக்கிங் அறைக்கு பெண்கள் சிலர் புகை பிடிக்கத் தான் செல்கின்றனார்களா இல்லை ரகசியமாக பேச செய்கிறார்களா என்பது தெரியவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வனிதாவிடம் கூட இந்த ஸ்மோக்கிங் அறை பற்றி கேட்கப்பட்டது. ஆனால், அவரோ பிக் பாஸ் வீட்டில் யார் புகைபிடிக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்லவில்லை. இருப்பினும் அங்கு இருக்கும் பெண்கள் சிலர் புகை பிடிப்பதாக மறைமுகமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement