கதிர் மீது காதலா ? பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக மனம் திறந்த குயின்ஸி. இப்படி ஒரு பதில யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க.

0
852
- Advertisement -

பிக் பாஸில் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் குய்ன்ஸி செய்திருக்கும் செயலானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 54 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத பல போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள். அதில் ஒருவர் தான் குயின்சி. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.

- Advertisement -

இவர் மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின்பு ஆல்பம் சாங்ஸ், கவர் சாங்ஸ் போன்றவை மூலம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் குயின்சி. அது மட்டும் இல்லாமல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் அன்பே வா தொடரிலும் குயின்சி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவரது வசீகர தோற்றதால் இவருக்கு ரசிகர்கள் கூடினார்கள்.

ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வரும் விதத்தை பார்த்து இவரை மிச்சர் லிஸ்டில் சேர்த்துவிட்டனர் ரசிகர்கள். இவரை Troll செய்து பல விதமான மீம்கள் ட்விட்டரில் போட்டு கலாய்த்து வந்தனர். அதோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டரும் இவரும் அப்பா மகளை போல பழகி வந்தனர், அதிலும் குய்ன்ஸி ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸில் இருந்து வெளியேறும் போது மிகவும் வருத்தப்பட்டிருந்தார். பின்னர் கடந்த வரம் குய்ன்ஸி குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

-விளம்பரம்-

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குய்ன்ஸி பின்னர் ராபர்ட் மாஸ்டரை சந்தித்தார். ராபர்ட் மாஸ்டரும் குய்ன்ஸிக்கு கேக் வெட்டி சப்பிறைஸ் கொடுத்தார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் மூலம் நேரலையில் பேசிய குயின்ஸி தற்போது வீட்டில் இருக்கும் அசீம், விக்ரமன், ஷிவின் இவர்கள் மூவரும் கண்டிப்பாக நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார்கள் என்று கூறினார். மேலும் அசீம் நல்லவர்தான் அவர் கோவப்படுவதை குறைத்து கொண்டால் கண்டிப்பாக நல்ல பேர் அவருக்கு கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது கதிருக்கும் குயின்ஸிகும் ஏதோ காதல் இருப்பது போல பலரும் நினைத்தார்கள். அதிலும் குறிப்பாக சிவின், கதிர் மீது தனக்கு இருக்கும் காதலை மறைமுகமாக சொன்னபோது அதை புரியாது போல கதிர் மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து கதிர் மற்றும் குயின்ஸி ஆகிய இருவரும் நெருக்கமாக இருப்பது போல சிவனை வெறுப்பேற்றினார்கள். இதனால் குய்ன்ஸி மற்றும் கதிர் காதலிப்பதாக சமூக வலைதளத்தில் பேசப்பட்ட நிலையில் சிவினை வெறுப்பேத்த அப்படி நாங்கள் இருவரும் Prank செய்தோம் என்று கூறியிருக்கிறார்

Advertisement