ஜனனி மீது மட்டுமல்ல, மைனா மீதும் செம காண்டில் இருக்கும் ரச்சிதாவின் கணவர் – என்ன பதிவிட்டுள்ளார் பாருங்க. மக்களுக்காக இதை செய்யுங்க –

0
182
dinesh
- Advertisement -

தன் மனைவியை விமர்சித்த ஜனனியை விமர்சிக்கும் விதமாக ரச்சிதா கணவர் பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜனனி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத புது முகங்களில் ஜனனியும் ஒருவர். இவர் இலங்கை தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர்.

- Advertisement -

ஜனனி குறித்த தகவல்:

இவர் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உணவு மற்றும் உடல் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

ஜனனி-அமுதவாணன்:

இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், நிகழ்ச்சியில் இவர் அமுதவாணனின் கை பாகையாக இருக்கிறார். இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஜனனியை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

ஜனனி செய்த செயல்:

அதாவது, நிகழ்ச்சியில் ரக்ஷிதா புடவை அணிந்திருந்தார். அப்போது மைனா, புடவையில் நீ வடிவமாக அழகாய் இருக்கிறாய். நீ புடவை கட்டினால் அழகாக இருக்கு. உனக்கு தான் நன்றாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அப்போது ரக்ஷிதா மட்டும் இல்லாமல் ஜனனி, தனலட்சுமி போன்ற பலருமே புடவை அணிந்திருந்தார்கள். மைனா ஜனனி இருக்கும்போது ரக்ஷிதாவை புகழ்ந்தது ஜனனிக்கு பிடிக்கவில்லை.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

பின்னர் அவர் அங்கிருந்து வந்து தனலட்சுமி இடம், நான் புடவை சரி செய்து கொண்டிருக்கும்போது மைனா வேணும் என்று ரக்ஷிதா தான் புடவையில் அழகாக இருக்கிறாய், வடிவாக இருக்கிறாய் என்று சொல்கிறார்.ரக்ஷிதா என்ன வடிவாக இருக்கிறார்? எருமை மாட்டுக்கு கட்டி விட்ட மாதிரி இருக்கு என்று கிண்டல் அடித்து பேசியிருக்கிறார். இப்படி அவர்கள் பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே ஜனனியை விமர்சித்து வந்தனர்.

பதிலடி கொடுத்த தினேஷ் :

இந்த நிலையில் ரட்சிதாவின் கணவர் தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் உங்களுக்கு பின்னால் பேசுபவர்கள், நம்பிக்கை இல்லாத நண்பர்கள் மற்றும் துரோகிகளை கடந்து விடுங்கள். உங்கள் விளையாட்டை மற்ற போட்டியாளர்கள் போல் விளையாடுங்கள். அதை பார்க்க நானும் ஆவலாக காத்திருக்கிறேன்Vote For Rachitha, i stand with rachitha போன்ற ஹேஸ் டேக்கையும் பதிவிட்டு மைனா மற்றும் ஜனனிக்கு ஓட்டு போட வேண்டாம் என்ற ரீதியில் அவர்களின் புகைப்படங்களை x மார்க் செய்து இருக்கிறார் தினேஷ்.

Advertisement