தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முகென், சேரன், வனிதா.! வென்றது யார் ? பிக் பாஸ் கொடுத்த ஸ்பெஷல் பவர் என்ன?

0
2745
Bigg-Boss

பிக்பாஸ் நிகழ்ச்சி பல வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரஸ்யமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வனிதா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த வார தலைவர் போட்டிக்காக வனிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நேற்றய நிகழ்ச்சியில் சிறப்பாக டாஸ்க் செய்த போட்டியாளர்கள் யார் என்பதை நேற்று தேர்ந்தெடுத்தனர்.

இதையும் பாருங்க : அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்.! அப்போ இவர் அடுத்த வாரமும் எஸ்கேபா.!

- Advertisement -

இதில் இறுதியாக முகென் மற்றும் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெற்ற வனிதாவும் முகென், சேரன் ஆகிய மூன்று பேருக்கும் அடுத்தவார தலைவர் பதவிக்கான டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களை பிரபலத்தின் அடிப்படையில் வரிசை செய்ய வேண்டும் என்று கூறுபட்டது. மேலும், தலைவர் பதிவிற்கு போட்டியிடும் மூவரும் மற்ற போட்டியாளர்களின் வரிசையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

பின்னர் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முகென், சேரன், வனிதா ஆகிய மூவரையும் ஒருவர் பின் ஒருவராக கண்பெஷன் ரூமிற்கு அழைத்து பிக் பாஸ் கேள்வியை கேட்டார். அப்போது சேரன் மற்றும் முகென் இருவரும் தவறாக விடையளிக்க வனிதா சரியாக கூறினார் இதன் மூலம் அவர் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் அடுத்த வார நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

வனிதா தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியான போதே அவர் தான் தலைவராக வருவார் என்று ஏற்கனவே நாம் கணித்திருந்தோம். தற்போது அது நடந்தும்விட்டது. அது போக இந்த வார தலைவராக வருபவருக்கு பிக் பாஸ் ஒரு சிறப்பு பவர் ஒன்றையும் அளித்துள்ளார். அது என்ன பவர் என்பது தான் தெரியவில்லை.

Advertisement