10 வருட நட்புன்னு சொல்லிட்டு இவளோ கேவலமா நடந்துக்குறீங்க ? – மைனா மீது செம காண்டில் ரச்சிதாவின் கணவர்.

0
394
dinesh
- Advertisement -

ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் மைனாவை வெளுத்துக்கட்டி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த சீரியலை திடீரென்று நிறுத்தி விட்டார்கள். இதனிடையே ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இருவரும் சிறந்த ஜோடிகளாக திகழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஆனால், கடந்த ஒரு வருடமாக இவர்கள் இருவரும் பிரிந்து தனியாக வாழ்கிறார்கள் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரக்ஷிதா போட்டியாளராக பங்கேற்றுகிறார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் ரக்ஷிதா:

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து ரக்ஷிதா நன்றாக விளையாடி கொண்டு வருகிறார். இவர் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாமல் விளையாடி கொண்டு வருகிறார். ஆனால், ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவிடம் செய்த சேட்டைகள் தான் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். அதேபோல் ரக்ஷிதாவின் தோழியான மைனாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்கள் என்பது பலரும் அறிந்த ஒன்றே. பத்தாண்டுகளுக்கு மேலாக இவர்கள் இருவருமே நண்பர்களாக இருந்தார்கள்.

மைனா-ரக்ஷிதா சர்ச்சை:

ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று சோசியல் மீடியாவில் சர்ச்சை இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் மைனா, மணிகண்டன் இடம் ரக்ஷிதா குறித்து பேசி இருந்தார். அதில் அவர், என்னுடைய திருமணத்திற்கு ரக்ஷிதாவை கூப்பிடவில்லை என்று அவர் என்னுடன் பேசி கொள்வதை நிறுத்திவிட்டார். அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் போது இந்த ஆடை போடக்கூடாது, அந்த ஆடை போடக்கூடாது என்றெல்லாம் ரக்ஷிதா என்னை கட்டாயப்படுத்துவார் என்றெல்லாம் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

தினேஷ் பதிவு:

பின் இந்த வாரம் நடந்து வரும் ஏலியன்- பழங்குடியினர் டாஸ்க்கில் ரக்ஷிதாவை சேரில் உட்கார வைத்து எல்லை மீறிய கேள்விகளை மைனா கேட்டிருந்தார். இருந்தாலும், ரக்ஷிதா அமைதியாக பதில் அளித்து இருந்தார். இது குறித்து பலருமே மைனாவை திட்டி இருந்தார்கள். இந்த நிலையில் ரக்ஷிதாவின் கணவர் கடுப்பாகி instagram பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உங்களுடைய சக போட்டியாளர், 10 ஆண்டுகளுக்கும் மேலான நெருங்கிய நண்பர். ஆனால், நீங்கள் அவரை சேரில் அமர வைத்து மோசமான கேள்விகளை கேட்டிருந்தீர்கள்.

மைனாவை வெளுத்து வாங்கிய தினேஷ்:

ஆனால், ரக்ஷிதா அந்த இடத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தார். சேரில் அமர்ந்திருக்கும் பொழுதும் ரக்ஷிதா நடந்து கொண்ட விதம் வேற லெவலில் இருந்தது. தனிப்பட்ட தாக்குதலை ஒரு நெருப்பு வளையம் போட்டு அழகாக எதிர் கொண்டிருந்தார். பலரின் வென்று வாருங்கள். ஐ ஸ்டாண்ட் ஃபார் ரக்ஷிதா, வோட் ஃபார் ரக்ஷிதா என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தினேஷ், ராபர்ட் மாஸ்டர் செய்த லீலைகளுக்கெல்லாம் காரணம் மைனா தான். மைனா வெளியேற வேண்டும் என்றெல்லாம் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement