கைய கடிச்சி Tatoo போட்டுக்குறது தான் ட்ரெண்ட் – இந்த சீஸனின் ரொமான்ஸ் ட்ராக் ரவீனா மற்றும் மணி தானா ? வைரலாகும் Cuts

0
2046
- Advertisement -

பிக் பாஸ் விதிமுறைகளை மணி-ரவினா மீறி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த செய்தி தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக ஞாயிற்று கிழமை தொடங்கியது. முதல் சீசனை தொடர்ந்து இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். ஞாயிற்று கிழமை வழக்கம் போல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். நேற்று நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி இருக்கிறது. முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் முதல் நாளில் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் விவாதம் தொடங்கிவிட்டது.

முதல் நாள் நிகழ்ச்சி:

அந்த வகையில் காலையில் ஜோவிதாவிற்கு சீனியர் நடிகர்கள் பலருமே படிப்பை பற்றி அறிவுரை செய்திருந்தார்கள். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஜோவிதா அமைதியாக இருந்தார். இப்படி முதல் நாளே நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று இருந்தது. மேலும், முதல் நாளே ஆறு பேரை தேர்வு செய்து சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இவர்கள் மற்ற போட்டியாளர்களை அதிகம் கவரவில்லை என்ற அடிப்படையில் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் விதி மீறல்:

பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சி ஆடலும் பாடலுடன் தொடங்கி இருக்கிறது. வழக்கம்போல் ஹவுஸ் மேட்ச் எல்லோரும் தங்களுடைய வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் விதிமீறல் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. பொதுவாகவே, பிக் பாஸ் வீட்டில் நடந்து முடிந்த ஆறு சீசங்களிலுமே பல விதிமுறைகள் நடந்திருக்கிறது.

ரவினா-மணி செய்த விதி மீறல்:

இதை வார இறுதியில் கமல் கண்டிப்பாக கண்டிப்பார். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகளும் இரண்டு பேர் விதி மீதி இருக்கிறார்கள். அவர்கள் மணி- ரவீனா தான். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது மணி தன்னுடைய ரகசியத்தை யாரிடமும் சொல்ல முடியாது என்று சொல்லி ரவீனாவின் கையில் எழுதி காட்டுகிறார். ரவீனாவும் மணி எழுதியதை படிக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலரும், கண்டிப்பாக இந்த வார இறுதியில் கமலஹாசன் மணி- ரவீனாவை கண்டிப்பார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
.

Advertisement