இந்த இரண்டு பேரை மிஸ் செய்வேன் – பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் கண்ணீருடன் ரேகா போட்ட முதல் பதிவு.

0
2269
rekha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக நடிகை ரேகா நேற்று வெளியேற்றப்பட்டர். 90 ஸ் சினிமா ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவில் டீச்சர் என்றால் முதலில் நினைவிற்கு முதலில் வருவது ரேகா தான். சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் என்ற டீச்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.“காவலன் அவன் கோவலன்”, “புன்னகை மன்னன்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போதும் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் “பியார் ப்ரேமா காதல்” படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

நடிகை ரேகா கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான பெண் கொழந்தையும் பிறந்தது. திருமணம் பிள்ளை குட்டி என்று செட்டில் ஆன பின்னர், ரேகா தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தார். தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேகாவுக்கு சினிமாவில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரேகாவிற்கு அவ்வளவாக ரசிகர்கள் ஏற்படவில்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் அன்பாக இருந்த வந்தார். அதில் ஒரு சிலர் அவரது அன்பை புரிந்து கொண்டார்கள். ஆனால்,ஒரு சிலர் இவர் நிகழ்ச்சிக்காக போலியான அன்பை காட்டுகிறார் என்று கூறினார்கள். இப்படி ஒரு நிலையில்தான் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறினார் நடிகை ரேகா.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது நடிகை ரேகா பிரிவை நினைத்து பாலா மற்றும் சிவானி ஆகிய இருவருமே கண் கலங்கி அழுதார்கள்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜி மற்றும் ஷிவானியின் புகைப்படத்தை பதிவிட்டு இருவரையும் மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார். மேலும் விசுவாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை போட்டு தனது மகள் மற்றும் ஷிவானி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு கண்ணீர் மல்க மிஸ் யூஷிவானி என்று குறிப்பிட்டிருக்கிறார்

-விளம்பரம்-

Advertisement