அப்போ, ராபர்ட் மாஸ்டர் சொன்னது எல்லாம் பொய்யா? இவர் தான் அவருடைய மகளாம். ஆதாரத்தை வெளியிட்ட ரசிகர்கள்.

0
1556
robert
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் முன்னாள் மனைவி மற்றும் மகள் குறித்து மிகவும் உருக்கமுடன் ராபர்ட் மாஸ்டர் பேசிய நிலையில் தற்போது அது குறித்த பல விவாகத்ங்களை நெட்டிசன்கள் துவங்கி இருக்கின்றனர். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஜிபி ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம் தான். ராபர்ட் மாஸ்டரின் பெயர் வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். ஆனால், தனக்கு இயங்குனர் வாய்ப்பை முதலில் கொடுத்தது வனிதா தான்.

- Advertisement -

அந்த நன்றிகடனுக்கு தான் அவர் பெயரை பச்சை குத்திக்கொண்டேன் என்று கூறி இருந்தார். அதே போல சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசிய வனிதா அவன் என்ன எனக்கு புருஷனா? பாய் பிரண்டா? ஏதோ பப்ளிசிட்டிக்காக அவன் பெயரை பயன்படுத்தினேன். அவன் ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தைகள் எல்லாம் இருக்கிறது. அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. இப்போது அவன் சிங்கிள் என்று சொல்லி இமேஜை மெயின்டைன் பண்ணி கொண்டு வருகிறான் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் தன் மனைவி மற்றும் மகள் குறித்து பேசிய ராபர்ட் மாஸ்டர் ‘எனக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. அந்த பெண்ணின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. நான் படிக்கவில்லை என்று அந்தப் பெண் என்னை விட்டு விலகி சென்றார்.பின் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அப்போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.

-விளம்பரம்-

என் மகளுக்கு நான்தான் அப்பா என தெரியுமா? தெரியாதா? என்று கூட எனக்கு தெரியாது. என்னுடைய முதல் மனைவி இன்னொரு திருமணம் செய்து கொண்டார். என் மகளுக்கு நான் தான் அப்பா என்று நான் இறந்த பிறகாவது கூட சொல்லுங்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த காரணமே இந்த நிகழ்ச்சியை பார்த்து பின்பாவது இவர் தான் என்னுடைய அப்பா என்பதை என் மகள் தெரிந்து கொள்வார் என்ற ஆசையில் தான்.ஒரு நாள் என்னுடைய குழந்தைக்கு ஏழு வயது இருக்கும் போது அவருடைய தாய் என்னை பார்த்து அங்கிளுக்கு ஹாய் சொல்லு என்று சொன்னார்.

என் மகளும் என்னை பார்த்து ஹங்கிள் என்று கூப்பிட்டார். எனக்கு மிகப்பெரிய வலியை தந்தது என்று கண் கலங்கியபடி ராபர்ட் மாஸ்டர் கூறி இருந்தார்.இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பழைய வீடியோ ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவில் இது என்னுடைய மகள் என்று இவர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். ஒரு குழந்தையோடு ராபர்ட் மாஸ்டர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோவாக அதில் பதிவாகி இருக்கிறது. அந்த குழந்தை ராபர்ட் மாஸ்டரின் குழந்தை தானா? அல்லது அவருடைய உறவினர்களின் குழந்தையா? என்று ஒரு சில ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். 

Advertisement