பிக் பாஸிற்கு பின் தொடர்ச்சியாக மூன்று படத்தில் கமிட் ஆன நடிகை.. யார் தெரியுமா..

0
16356
Sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு சினிமா துறையில் பல எதிர்பார்க்காத வகையில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிலையில் இந்த வருடம் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அந்த அளவிற்கு எந்த ஒரு பெரிதான படவாய்ப்புகளும் போட்டியாளர்களுக்கு கிடைக்கவில்லை. அதிலும் பெண்கள் யாரும் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு தற்போது 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக வந்துகொண்டிருக்கின்றன. மேலும், இவரே பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சினிமா துறைக்கு செல்லும் முதல் போட்டியாளர் ஆவார்.

Image

அது மட்டும் இல்லைங்க நடிகை சாக்ஷி அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் படக்குழுவினர். இந்நிலையில் நடிகர் விஷால் ‘அயோக்கியா’ படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அது சுந்தர். சி இயக்கும் ‘ஆக்ஷன்’ படத்தில் விஷால் நடிக்கிறார். எப்பவுமே சுந்தர். சி இயக்கும், விஷால் நடிப்பில் இசையமைப்பாளர் நம்ம ஹிப்ஹாப் தமிழா தானே. ஆமாங்க, இந்த படத்திலும் ஹிப்ஹாப் தமிழா தான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்திற்கான டீசர் சமீபத்தில் தான் வெளியிட்டார்கள். மேலும், இந்த படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா லட்சுமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். வில்லனாக கபீர் சிங்கும் நடித்துள்ளார். இந்த படத்தை ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். கிட்டத்தட்ட, ஆக்சன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்திற்கு சாக்ஷி அகர்வால் டப்பிங் செய்து உள்ளார் என்ற தகவல் வெளியாகிறது. இதுகுறித்து சாக்ஷி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆக்சன்’ படத்துக்காக டப்பிங் செய்தது நான் தான். மேலும், டப்பிங் செய்வதில் இது தான் என்னுடைய முதல் அனுபவம். என் குரலை நானே கேட்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு என்றும் கூறியிருந்தார்.

Image

இதனை தொடர்ந்து தற்போது ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்திலும் சாக்ஸி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அது மட்டும் இல்லைங்க ராய் லட்சுமி நடித்து வரும் ‘சின்ட்ரெல்லா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சாக்ஷி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறாராம்.இது மட்டும் இல்லைங்க ஆர்யாவுடனும் சாக்ஷி இணைகிறார் என்ற தகவல் வெளியானது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்து வரும் படம் ‘டெடி’. இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழுவினர். அப்ப இந்த வருஷம் நம்ம சாக்ஸி அகர்வாலுக்கு ஜாக்பாட் தாங்க என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement