அடேங்கப்பா அனிதா இவ்ளோ நேரம் பேசினாரா ? அனிதாவின் பேச்சை நிறுத்த சொன்ன காரணத்தை கூறிய சம்யுக்தா.

0
2355
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 60வது நாட்களை கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்திருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் நிறைவு சக்ரவர்த்தி என்று நான்கு பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சம்யுக்தா வெளியேறி இருந்தார். இதுவரை வெளியேறிய 4 பேரை விட சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரியஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று. அதற்கு காரணம், கடந்த வாரம் நாமினேட் ஆன அனிதா, தனக்கு கிடைத்த Nomination Topple Card-ஐ பயன்படுத்தி சம்யுக்தாவை நாமினேட் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சம்யுக்தா,அனிதாவின் நீளமான பேச்சு குறித்து கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் மிஸ் செய்யும் யாரவது ஒரு நபர் குறித்து கூற வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். அப்போது அனிதா பேசிய போது முதலில் தனது கணவரை பற்றி பேசிவிட்டு பின்னர் தனது தந்தை பற்றியும் பேச ஆரம்பித்தார். மற்ற போட்டியாளர்களின் கதைகளை கேட்டு கண்ணீர் வடித்த போட்டியாளர்கள். அனிதாவின் பேச்சை கேட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

- Advertisement -

ஒருகட்டத்தில் அனிதாவின் பேச்சை தாங்க முடியாமல் சம்யுக்தா, போதும் அனிதா மிகவும் ரொம்ப நீளமாக போகிறது என்று அனிதாவின் பேச்சை நிறுத்த சொன்னார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சம்யுக்தா இதற்கான காரணத்தை கூறுகையில், அந்த டாஸ்க்கே யாரை மிஸ் செய்கிறோம் என்பது தான். ஏற்கனவே மற்றவர்கள் பேசியதை கேட்டு டியர்ட் ஆகி இருந்தோம். அதுவும் அனிதா கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் பேசினார்கள். இதனால் ஒரு கட்டத்தில் அனைவர்க்கும் சிரிப்பு வந்துவிட்டது.

வீடியோவில் 30 30 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், அதை எதையும் கண்டுகொள்ளாமல் அனிதா பேசிகொண்டே இருந்தார். இதனால் யாராலும் பொறுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அனைவரும் அனிதாவின் பேச்சை நிறுத்தசொல்லுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள் . அதனால் நானும் சொன்னேன். ஆனால், அனிதாவிடம் சொன்ன போது எவ்ளோ நேரம் பேசினால் என்ன? எது தேவையோ அதை மட்டும் எடிட் செய்து போட்க்கொள்ள போகிறார்கள் என்று சொன்னால். ஆனால், இப்படி பல மணி நேரம் பேசினால் எடிட் செய்பவர்களுக்கு எது முக்கியமான பகுதி என்பது எப்படி தெரியும் என்று கூறியுள்ளார் சம்யுக்தா.

-விளம்பரம்-
Advertisement