பெற்றோர் வாழ்ந்த வீட்டை விற்று சரவணன் செய்த செயல்.! மனம் நெகிழி வைத்த பேட்டி.!

0
5092
saravanan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண்கள் குறித்து சர்ச்சையான விஷங்களை பேசியதால் சரவணன் மீது சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

-விளம்பரம்-

இதனால் சரவணனை பகிரங்க மன்னிப்பு கேட்க சொன்னதால் சரவணனும் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்ட சில நாட்கள் கழித்து சரவணன் பேசிய சர்ச்சை கருத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணனை வெளியேற்றினர். இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை பிக் பாஸ் மீது வைத்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணன் எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை. இருப்பினும் சமீபத்தில் சரவணனுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அப்போது எடுத்துக்கொண்ட சரவணனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன் முறையாக சரவணன் பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது பெற்றோர்கள் குறித்து பேசிய சரவணன், என்னுடைய அப்பா அம்மாவுக்கு அவர்கள் உயிரோடு இருந்தவரை நான் எதுவும் செய்ய முடியவில்லை.

-விளம்பரம்-
Saravanan

அவர்கள் மறைந்த பின்னர் அவர்கள் வாழ்ந்த வீட்டில் அவர்கள் நினைவு எனக்கு உறுதிகொண்டே இருந்தது. அதனால் அந்த வீட்டை நான் விற்றுவிட்டேன். அந்த பணத்தில் தற்போது ஒரு கோவில் ஒன்றை கட்டியுள்ளேன்.மேலும், என்னுடைய அப்பா ஒரு போலீஸ் அதிகாரி அதனால் அவரை போல ஒரு ஐயனார் சிலையை செய்துளேன். இன்னும் சிறிது நாளில் அந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற நடைபெற இருக்கிறது.

Advertisement