கொரோனா இல்லா மாவட்டமான சொந்த ஊர் – சொந்த கோவிலில் சரவணன் செய்துள்ளதை பாருங்க. சித்தபுக்கு எவ்ளோ நல்ல மனசு.

0
2086
saravanan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகர் சரவணன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சரவணன். அதன்பின்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் சரவணன் இருந்த போது கல்லூரி படிக்கும்போது பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள். சரவணன் மன்னிப்பு கேட்ட பின்பு சில நாட்கள் கழித்து பெண்கள் விஷயத்தில் சரியான கருத்துக்களை கூறியதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள்.

-விளம்பரம்-

ர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணன் பேசும்போது, என்னுடைய அப்பா அம்மாவுக்கு அவர்கள் உயிரோடு இருந்தவரை நான் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் மறைந்த பின்னர் அவர்கள் வாழ்ந்த வீட்டில் அவர்கள் நினைவு எனக்கு உறுதிகொண்டே இருந்தது. அதனால் அந்த வீட்டை நான் விற்றுவிட்டேன். அந்த பணத்தில் தற்போது ஒரு கோவில் ஒன்றை கட்டியுள்ளேன்.மேலும், என்னுடைய அப்பா ஒரு போலீஸ் அதிகாரி அதனால் அவரை போல ஒரு ஐயனார் சிலையை செய்துளேன் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

மேலும், தனது தந்தைக்காக தான் கட்டிய ஐயனார் கோவில் ஒன்றை காண்பித்திருந்தார் சரவணன். அதில் ஐயனாரின் பக்கத்தில் காவலர் சிலையாக தனது அப்பாவின் உருவத்தை சிலையாக வடிவமைத்து வைத்துள்ளார் சரவணன். இந்த கோவிலின் கும்பாஷேகம் கடந்த சில மாதத்திற்கு முன் நடைபெற்றது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணன் பேசுகையில்,

 ஊரடங்கை கடுமையாக கடைபிடித்ததாலும் கடவுள் அருளாலும் எண்ணிக்கையை அதிகரிக்கவிடாம ஒரே அளவில் வெச்சிருந்து, ஒருவழியாக எல்லாரையும் குணப்படுத்திட்டாங்க. ஒரு வாரத்துக்கும் மேல் ஆன நிலையில புதிய தொற்று இல்லாததால, கொரோனா இல்லாத மாவட்டமாஅறிவித்துவிட்டார்கள். மக்களோட இயல்பு வாழ்க்கையை திரும்ப தந்ததுக்கு நன்றி செலுத்தும் வகையிலதான் கடந்த ஞாயித்துக்கிழமை குடும்பத்தோடு போய் சாமி கும்பிட்டுட்டு வந்தேன்.

-விளம்பரம்-

சில மாதங்களுக்கு முன்னர் நானே எங்க தோட்டத்தில் வீரமுனி ஆலயத்தைக் கட்டி எழுப்பினேன். கிடா வெட்டி சிறப்பா கும்பிடணும்னு ஆசைதான்.ஆனால், நாடு இருக்கும் நிலையில கூட்டம் சேர்க்கறது சரியாக இருக்காது என்பதால்  இப்ப சேவல் மட்டும் வெட்டி பொங்கலிட்டு வீரமுனிக்கு படையலிட்டாச்சு, மக்களுக்கு பழையபடி வாழ்க்கையை சேலம் மக்களுக்கு மட்டுமில்ல, கொரோனா பிடியில சிக்கிய எல்லா மக்களுக்குமே தர வேண்டியது அவன் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

Advertisement