மதுமிதாவை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் அடுத்த போட்டியாளர்.! வெளியான தகவல்.!

0
815

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டு விடியோக்கள் கூட வெளியாகி இருந்தது.

Related image

ஆனால், அதற்கு பின்னர் வேறு எந்த ப்ரோமோவையும் வெளியிடவில்லை. ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட இரண்டு ப்ரோமோக்களை தான் மீண்டும் மீண்டும் ஒளிபபரப்பி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஓகே ஓகே பட நடிகை ஜாங்கிரி மதுமிதா மட்டும் கலந்துகொள்வது உறுதியானது.

- Advertisement -

அவரை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் இணையத்தில் அடிபட்டு வந்தது. ஆனால், எந்த ஒரு போட்டியாளரை பற்றிய விவரமும் உறுதியான பாடில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் அடுத்த போட்டியாளரின் விவரம் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மோகன் வைத்யா கலந்துகொள்ள போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. பாடகரான மோகன் வைத்யா தமிழில் அந்நியன், சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் மற்ற போட்டியாளர்களின் பட்டியலை டிவி நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement