பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் இவர் வெளியே, இவர் உள்ளே. மீண்டும் ஒரு வைல்டு கார்ட்.

0
1632
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஆறு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 15 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். ஆனால் 7வது வாரமே நெருங்கி விட்டது.. இந்த ஏழு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-104.jpg

கடந்த வாரம் முழுக்க தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒரே கொண்டாட்டமாக தான் சென்றுக்கொண்டு இருந்தது. இதனால் வீட்டில் பெரிதாக பிரச்சினைகள் ஏற்படவில்லை அதே போல தீபாவளி சிறப்புச் சலுகையாக கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என்று கமல் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

- Advertisement -

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ரியோ, பாலா, சம்யுக்தா, சோம், ஆரி, அனிதா, சுசித்ரா ஆகிய 7 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பரப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வாரம் சுசித்ரா வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் கூட சுசித்ராவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தன. எனவே, இந்த வாரம் சுசித்ரா தான் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸின் 50வது நாளான இன்று (நவம்பர் 22) இந்த சீஸனின் 3வது வைல்டு கார்டு போட்டியாளராக விஜய் டிவி சீரியல் நடிகர் அஸீம் கலந்து கொள்ள இருக்கிறாராம். அதனை உறுதி செய்யும் வகையில் அஸீமின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் Expect The Unexpected என்று பதிவிடபட்டுள்ளது. மேலும், அதை அஸீமின் டீம் இந்த பதிவை போட்டுள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது. அஸீம் என்ட்ரி மூலம் தற்போது பிக் பாஸ் வீட்டின் எண்ணிக்கை மீண்டும் 15 நபர்கள் என்று மாறி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement