போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே கமலின் முதல் சந்திப்பு – வெளியான ப்ரோமோ.

0
1332
kamal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒரு வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. கடந்த 5 நாட்களில் சுரேஷ் மற்றும் அனிதா சம்பத் பிரச்சினையைத் தவிர வேறு எந்த விஷயமும் சுவாரசியமாக நடைபெறவில்லை. அதே போல கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் ஒரு சில போட்டியாளர்கள் சொன்ன அவர்களின் வாழ்க்கைக் கதைகள் கொஞ்சம் மனதை கவர்ந்தது. பொதுவாக சனி மற்றும் ஞாயிறுகளில் தான் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே சனி மற்றும் ஞாயிறுகளில் போட்டியாளர்களை கமல் சந்தித்து கொஞ்சம் பஞ்சாயத்து செய்வார் ஆனால், முதல் வாரம் என்பதால் அப்படிப்பட்ட சுவாரசியமான பஞ்சாயத்துகள் எதுவும் நடக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சுரேஷ் சக்ரவத்தியின் ‘எச்சில்’ பஞ்சாயத்தில் அனிதா கேட்ட குறும்படத்தை கமல் போடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த வாரம் பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை பற்றி சொல்லி இருந்தார்கள். அப்படி போட்டியாளர்கள் சொன்ன வாழ்க்கை கதையில் இருந்து யாருடைய கதை மற்ற போட்டியாளர்களுக்கு திருப்தி இல்லையோ, அவர்கள் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லையோ, அவர்களை அடுத்த வார நாமினேஷன் தேர்ந்தெடுக்கலாம் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த டாஸ்கின் முடிவில் அடுத்த வார நாமினேஷனில் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். அதில் ரேகா, சனம் செட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா, ஆஜித், சிவானி, சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். இந்த எட்டுப் பேரிலிருந்து தான் இரண்டு பேரை மற்ற போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்ந்தெடுக்க முடியும். இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement